For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Patiala: பிறந்தநாள் இறந்த நாளாக மாறிய சோகம்.!! ஆன்லைனில் ஆர்டர் செய்த கேக் சாப்பிட்ட 10 வயது சிறுமி பலி.!!

07:28 PM Mar 31, 2024 IST | Mohisha
patiala  பிறந்தநாள் இறந்த நாளாக மாறிய சோகம்    ஆன்லைனில் ஆர்டர் செய்த கேக் சாப்பிட்ட 10 வயது சிறுமி பலி
Advertisement

பாட்டியாலா நகரில் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட பிறந்தநாள் கேக்கை சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து குறித்த ஆன்லைன் உணவு விநியோக தளத்திற்கு சமூக ஊடகப் பயனர்கள் பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

சமூக வலைதளங்களில் இந்த நிகழ்விற்கு கடும் எதிர்ப்பு வந்த நிலையில் கிளவுட் கிச்சன் தொடர்பான முறையான வரையறை கிலோ கட்டுப்பாடுகளோ இல்லை என சமூக ஊடகப் பயனர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 273 மற்றும் 304-ஏ பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிறந்தநாள் கேக்கை சாப்பிட்ட சிறுமி உயிரிழந்ததாகவும், அதை சாப்பிட்ட பிற குடும்ப உறுப்பினர்களுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

இறந்த சிறுமியின் தாயார் காஜல் தனது மகளின் பிறந்த நாளிற்காக கேக் ஆர்டர் செய்திருக்கிறார். அவர் ஆர்டர் செய்த பில்லில் 'கேக் கன்ஹா' என்ற முகவரி குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் பாட்டியாலாவில் அந்த முகவரியில் யாரும் இல்லை. இதனால் கிளவுட் கிச்சனாக இருக்கும் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மேலும் சொமாட்டோ நிறுவனம் வழங்கிய பில்லில் அமிர்தசரஸ் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த விவகாரத்தில் சொமாட்டோ நிறுவனத்தை பலமுறை தொடர்பு கொள்ள முயற்சி செய்த போதும் அவர்கள் பதிலளிக்க விரும்பவில்லை.

அனுபவம் வாய்ந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து கட்டுரையாளர் டாக்டர் நந்திதா ஐயர், ஸ்விக்கி மற்றும் சொமாட்டோ ஆகியவை கிளவுட் கிச்சனாக செயல்படுகிறதா என்பதை ஒவ்வொரு பட்டியலிலும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று எக்ஸ் பதிவில் தெரிவித்தார். வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டர்களை வைப்பதற்கு முன் தகவலறிந்த முடிவுகளை எடுக்க இது உதவும் என்று அவர் பரிந்துரைத்தார்.

இந்த கிளவுட் கிச்சனின் மூலம் நாம் ஆர்டர் செய்யும் உணவுகள் எங்கிருந்து நமக்கு கிடைக்கின்றன. அவற்றின் தரம் எவ்வாறு இருக்கிறது என்பது பற்றி நமக்கு எதுவும் தெரிவதில்லை. எங்கோ பாதுகாப்பில்லாத இடங்களில் இருந்தும் அசுத்தமான இடங்களில் இருந்தும் நமக்கு உணவு வழங்கப்படுகிறது என ஐயர் என்பவர் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

கிளவுட் கிச்சன் முறையில் ஒரு சமையலறையில் 20 வெவ்வேறு உணவகங்கள் செயல்படுகின்றன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.நீங்கள் ஆர்டர் செய்த உணவைச் சுற்றி எத்தனை எலிகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் இருந்தன என்பது உங்களுக்குத் தெரியாது. மேலும் நீங்கள் ஆர்டர் செய்த சமைத்த பருப்பு அல்லது அரிசி காலாவதியாகிவிட்டதா என்பது உங்களுக்குத் தெரியாது என்று பர்ஜாத்யா என்பவர் தனது X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Read More: Edappadi: ஊழல் செய்வதிலும், லஞ்சம் வாங்குவதிலும், சூப்பர் முதலமைச்சர் ஸ்டாலின்…!

Advertisement