முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சூட்கேசில் மறைத்து கடத்தப்பட்ட 10 குட்டி அனகோண்டா பாம்புகள் பறிமுதல்!

12:24 PM Apr 23, 2024 IST | Mari Thangam
Advertisement

பாங்காக் நகரில் இருந்து பெங்களூரு வந்த விமானத்தில் 10 அரிய வகை மஞ்சள் அனகோண்டா பாம்புகள் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.

Advertisement

கர்நாடகா மாநிலம் பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் நேற்று வழக்கம்போல் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். பேங்க்காக்கிலிருந்து விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ஒரு பயணியின் உடமையை ஸ்கேன் செய்த போது, அவரது பையில் ஒரு பொருள் நெலிவதை கண்டனர். உடனடியாக திறந்து பார்த்தபோது, அதில் 10 மஞ்சள் அனகோண்டாக்கள் இருந்தது தெரியவந்தது. இதை அடுத்து அதை கடத்தி வந்தவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக சுங்கத் துறை சார்பில் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘பெங்களூரு சுங்கத் துறையினர், பாங்காக்கில் பாம்புகளை கடத்தி வந்த பயணியை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. வனவிலங்கு கடத்தலை பொறுத்துக்கொள்ள மாட்டோம்’ என குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவில் வனவிலங்கு வர்த்தகம் மற்றும் கடத்தல் சட்டவிரோதமானது. கடந்த ஆண்டு, சுங்கத் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் ஒரு பயணியிடம் நடத்தப்பட்ட சோதனையில் பாங்காக்கில் இருந்து குட்டி கங்காரு உள்பட 234 வன விலங்குகளை பெங்களூரு விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
anaconda snakesbangalore airportseized
Advertisement
Next Article