கொலம்பியா விமான விபத்தில் பணியாளர்கள் உட்பட 10 பேர் உயிரிழப்பு!. மோசமான வானிலையால் நிகழ்ந்த சோகம்!
Plane crash: கொலம்பியாவில் மோசமான வானிலை காரணமாக கடந்த புதன்கிழமை காணாமல் போன சிறிய ரக விமான விபத்துக்குள்ளானதில் 2 பணியாளர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.
வடமேற்கு கொலம்பியாவில் பசிஃபிகா டிராவல் மூலம் இயக்கப்படும் சிறிய ரக விமானம் 10 பயணிகளுடன் கடந்த புதன்கிழமை ஜுராடோவிலிருந்து மெடலின் செல்லும் வழியில் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது, இதையடுத்து, வடமேற்கு கொலம்பிய டிபார்ட்மென்ட் ஆண்டியோகுவியாவில் உள்ள உர்ராவ் நகராட்சியின் கிராமப்புற பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பணியாளர்கள் உட்பட 10 பேர் பலியாகினர். மோசமான வானிலை காரணமாக மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
Antioquia இன் இடர் மேலாண்மை துறையின் இயக்குனர் Carlos Rios Puerta கூறுகையில், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்றும், உதவிகளை வழங்குகிறோம் மற்றும் இந்த சோகமான நிகழ்விலிருந்து எழும் ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்வோம்." என்று கூறினார்.