தமிழ்நாட்டில் மேலும் 10 சுங்கச்சாவடிகள்..!! எங்கெங்கு தெரியுமா..? ஆர்டிஐ அதிர்ச்சி தகவல்..!!
தமிழ்நாட்டில் புதிதாக 10 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக ஆர்டிஐ தெரிவித்துள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திற்கு சமூக ஆர்வலர் ஒருவர் பல்வேறு கேள்விகளை முன்வைத்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பினார். இதற்கான பதிலில், தமிழ்நாட்டின் இரு மண்டலங்கள் உள்ளிட்ட 26 இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை மண்டலங்களில், சுமார் 805 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை மண்டலத்தின் கீழ் 28, சென்னை மண்டலத்தின் கீழ் 31 சுங்கச்சாவடிகள் என 59 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பாக புதிய சாலைகள் விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மதுரை திட்ட இயக்குநர் அலுவலகத்தின் கீழ் மதுரை மேலூர் முதல் காரைக்குடி வரை 4 வழிச்சாலையும், வாடிப்பட்டி முதல் தாமரைப்பட்டி வரை சுற்றுவட்டச் சாலையும் அமைக்கப்பட்டு வருகிறது. இவ்விரு இடங்களில் விரைவில் 2 புதிய சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. இதேபோல், விக்கிரவாண்டி முதல் சேத்தியாத்தோப்பு வரை 4 வழிச்சாலையும், மருங்கூர் கிராமத்தில் சுங்கச்சாவடியும் அமைகிறது.
திண்டுக்கல் முதல் தேனி வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியும், சேவுகபட்டி பகுதியில் சுங்கச்சாவடியும் அமைகிறது. கமலாபுரம் முதல் ஒட்டன்சத்திரம் வரை தேசிய நெடுஞ்சாலையும், பாறைப்பட்டி பகுதியில் சுங்கச்சாவடியும், மடத்துக்குளம் முதல் பொள்ளாச்சி வரை நெடுஞ்சாலை அமைக்கும் பணியும், கோமங்கலம் புதூர் பகுதியில் சுங்கச்சாவடியும் அமையவுள்ளது. துவாக்குடி பகுதியில் புதிய சுங்கச்சாவடி அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே 59 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 10 சுங்கச்சாவடிகள் விரைவில் திறக்கப்பட இருப்பது வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More : கங்கனா கன்னத்தில் பளார் பளார்..!! பெண் CSIF ஊழியர் சஸ்பெண்ட்..!! ஏர்போர்ட்டில் பெரும் பரபரப்பு..!!