For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஜூன் மாதத்தில் 10 நாட்கள் வங்கி விடுமுறை!… தேதி வாரியாக முழுபட்டியல்!

08:30 AM May 24, 2024 IST | Kokila
ஜூன் மாதத்தில் 10 நாட்கள் வங்கி விடுமுறை … தேதி வாரியாக முழுபட்டியல்
Advertisement

Bank Holidays: ஜூன் மாதம் தொடங்க உள்ள நிலையில், வங்கிகள் சம்பந்தமான வேலைகள் ஏதும் இருப்பின் வாடிக்கையாளர்கள், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை நாட்களை பார்த்து, அதற்கு தகுந்தாற் போல அவர்களின் வேலைகளை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அந்தவகையில் ஜூன் மாதத்தில் மொத்தம் 10 நாட்கள் வங்கிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் திருவிழாக்கள், சனி மற்றும் ஞாயிறு (வார இறுதி விடுமுறை) ஆகியவை அடங்கும். இந்த விடுமுறைகளில் சில குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தாது.

Advertisement

ஜூன் 2024க்கான பொது விடுமுறை நாட்களின் விரிவான பட்டியல்: ஜூன் 2: ஞாயிற்றுக்கிழமை காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். ஜூன் 8ம் தேதி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையன்று நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும். ஜூன் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். ஜூன் 15ம் தேதி யங் மிசோ அசோசியேஷன் (ஒய்எம்ஏ) நாள்/ராஜ சங்கராந்தி அன்று மிசோரம் மற்றும் ஒடிசாவில் வங்கிகளுக்கு விடுமுறை. ஜூன் 16: ஞாயிற்றுக்கிழமை காரணமாக, நாட்டின் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும்.

ஜூன் 17ல் மிசோரம், சிக்கிம் மற்றும் இட்டாநகர் தவிர மற்ற மாநிலங்களில் ஈத்-உல்-அழா காரணமாக விடுமுறை அளிக்கப்படும். ஜூன் 18: ஈத்-உல்-அஷா காரணமாக ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். ஜூன் 22ம் தேதி மாதத்தின் நான்காவது சனிக்கிழமையன்று நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். ஜூன் 23ல் ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். ஜூன்30: ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை காரணமாக நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

Readmore: சீசன் முழுவதும் 52 ரன்கள்தான்!… தோனியுடன் ஒப்பிட்டு மேக்ஸ்வெலை கலாய்க்கும் ரசிகர்கள்!

Advertisement