For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

1 டிரில்லியன் டாலர்..!! மாஸ் அறிவிப்பை வெளியிடும் மு.க.ஸ்டாலின்..!! நாடே திரும்பி பார்க்கப்போகுது..!!

07:26 AM Dec 29, 2023 IST | 1newsnationuser6
1 டிரில்லியன் டாலர்     மாஸ் அறிவிப்பை வெளியிடும் மு க ஸ்டாலின்     நாடே திரும்பி பார்க்கப்போகுது
Advertisement

தமிழ்நாட்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு (TNGIM - டிஎன்ஜிஐஎம்) 2024 ஜனவரி 7, 8 ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது. டிஎன்ஜிஐஎம் 2024 முதலீட்டாளர்கள், உலக நாட்டு வல்லுனர்கள், நிர்வாக தலைகள் மற்றும் கல்வியாளர்களை ஒன்றிணைக்கும் நிகழ்வு ஆகும். நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும், டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி தமிழ்நாட்டை கொண்டு செல்லும் வகையில் இந்த தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் கொண்டு வரவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும் இந்த மாநாடு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Advertisement

இதில் சர்ப்ரைஸ் அறிவிப்பு ஒன்று வெளியாகவுள்ளது. அதன்படி, உலக முதலீட்டாளர் உச்சி மாநாட்டில் 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கான திட்டத்தை தமிழ்நாடு அரசு வெளியிட உள்ளது. அதாவது 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கான மொத்த ப்ளூ பிரிண்ட், தமிழ்நாட்டின் கொள்கை மாற்றங்கள், சாலை கட்டுமானங்கள் என்று பல்வேறு விஷயங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாக இருக்கின்றன.

இந்நிலையில்தான், தமிழ்நாட்டில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பார்ட்னர் நாடாக வருவதற்கு பல்வேறு உலக நாடுகள் முன்வந்துள்ளன. இதனால் இந்த மாநாடு மிகப்பெரிய அளவில் உருவெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதாவது அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, UK, ஜப்பான், தென் கொரியா, ஜெர்மனி, டென்மார்க், சிங்கப்பூர், தைவான் ஆகிய நாடுகள் இந்த மாநாட்டிற்கு பார்ட்னர் நாடுகளாக வந்துள்ளன.

தமிழ்நாட்டில் நடத்தப்பட உள்ள இந்த முதலீட்டாளர்கள் மாநாடு மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. 3 லட்சம் கோடிக்கு முதலீடுகளை கொண்டு வர தமிழ்நாடு அரசு ஆலோசனைகளை செய்து வருகிறது. தமிழ்நாடு 2 ஆண்டுகளில் அதிகளவிலான தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட இருசக்கர மின் வாகனங்களில் 46% வாகனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை. கொரோனாவுக்கு பின்பாக 2022இல் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. 2022ஆம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 1 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் பொருளாதார ரீதியாக கடுமையான பின்னடைவை சந்தித்த போதும், கொரோனாவுக்கு பின் பல்வேறு மாநிலங்கள் கடுமையாக கஷ்டப்பட்ட போதும் கூட தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிந்துள்ளன. முக்கியமாக இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை வகித்து வருகிறது. ஏற்கனவே ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது. அந்த அளவிற்கு சென்னை முழுக்க கார், பைக் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில்தான் உலகிலேயே மிகப்பெரிய பைக் உற்பத்தி ஆலையை ஓலா நிறுவனம் கிருஷ்ணகிரியில் அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement