1.90 கோடி பேர் வாக்களிக்கவில்லை - வெளியான அதிர்ச்சி தகவல்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடந்து முடிந்தது. மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்தம் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளதாக என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2019 மக்களவைத் தேர்தலின்போது மக்கள் அணி அணியாய் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களித்தனர். மேலும் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல போதிய பேருந்து வசதி செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இளைஞர்கள் விடிய விடிய பேருந்துக்காக காத்துகிடந்ததும் நாம் அறிந்ததே. ஆனால், 2019 தேர்தலில் அனைவரிடமும் காணப்பட்ட எழுச்சியும், ஆர்வமும் இந்த தேர்தலில் இல்லை என்பதே உண்மை. அந்த அளவிற்கு மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதை நம்மால் அறிய முடிகிறது. ஏன் நிறைய இடங்களில் மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். 2019 மக்களவைத் தேர்தலில் 72.44% வாக்குகள் பதிவான நிலையில் 2024 தேர்தலில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளது. இது 2019ஆம் ஆண்டை ஒப்பிடும்போது சுமார் 3% குறைவு.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.48% வாக்குகள் பதிவாகி உள்ளன. தற்போது அதிகபட்சமாக வாக்குப் பதிவான தருமபுரி தொகுதியில் கடந்த தேர்தலில் 82.33% வாக்குகள் பதிவாகி இருந்தன. ஆக, கடந்த முறையை விட வாக்குப்பதிவு குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 4 தொகுதிகளில் மட்டுமே கடந்த முறையை விட அதிக வாக்குப்பதிவு நடந்துள்ளது. கள்ளக்குறிச்சி, சேலம், கோவை, வேலூர் ஆகிய 4 தொகுதிகளில் மட்டுமே கடந்த 2019 தேர்தலை விட சற்று அதிக வாக்குப்பதிவு நடந்துள்ளது. மற்ற 35 தொகுதிகளில் கடந்த முறையை விட வாக்குப்பதிவு குறைந்துள்ளது. கிட்டத்தட்ட 1.90 கோடி பேர் வாக்களிக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Read More: Bird Flu | வேகமெடுக்கும் பறவைக்காய்ச்சல்: அறிகுறிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன..!