மகிழ்ச்சி...! ஜுலை 15-ம் முதல் 1.48 லட்சம் பேருக்கு புதிதாக மகளிர் உரிமைத் தொகை...!
ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 1.7 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகையை அன்றாடச் செலவிற்கும், சேமிப்பிற்கும் பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ஒரு லட்சத்து 48 ஆயிரம் நபர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு; மகளிர் உரிமைத் தொகை தற்போது ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு இருப்பதாகவும், மகளிர் உரிமைத் தொகை பெற, ஏற்கனவே விண்ணப்பித்த விண்ணப்பங்களில் பல்வேறு காரணங்களால் விடுபட்டுள்ள நபர்களுக்கு ஜூலை 15-ம் தேதி ஒரு லட்சத்து 48 ஆயிரம் நபர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.
மக்கள் அதிகாரிகளையும் அரசாங்கத்தையும் தேடிச் சென்று, தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நிலையை மாற்றி மக்களை நோக்கி அரசாங்கம் செல்ல வேண்டும் மக்கள் பிரதிநிதிகளும் அரசு அதிகாரிகளும் ஒன்றிணைந்து மக்களின் கோரிக்கைகளையும் குறைகளையும் மக்கள் இருக்கும் இடத்தில் சென்று நேரடியாக அறிந்து கொண்டு அவற்றுக்கான தீர்வை அளிப்பதற்காகவே இந்த திட்டம் இன்று தொடங்கப்பட்டு இருப்பதாக கூறினார்.