For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

1.25 லட்சம் கன அடி நீர் திறப்பு..!! குடும்பத்துடன் வெளியேறிய காவிரி கரையோர மக்கள்..!!

1.25 lakh cubic feet of water has been released from Mettur dam. Subsequently, measures are being taken to take the surplus water to 100 lakes in Salem district.
09:34 AM Jul 31, 2024 IST | Chella
1 25 லட்சம் கன அடி நீர் திறப்பு     குடும்பத்துடன் வெளியேறிய காவிரி கரையோர மக்கள்
Advertisement

மேட்டூர் அணையில் இருந்து 1.25 லட்சம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, உபரி நீர் சேலம் மாவட்டத்தில் உள்ள 100 ஏரிகளுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement

தமிழ்நாட்டின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கக் கூடிய மேட்டூர் அணை, தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி மேட்டூர் அணைக்கு வரக்கூடிய நீர் அனைத்தும் காவிரியாற்றில் திறந்துவிடப்படுகிறது. அவ்வாறாக வெளியேற்றப்படும் நீரை சேலத்தில் உள்ள வறண்ட ஏரிகளில் சேமித்து பயன்படுத்த வேண்டும் என ரூ.673 கோடி செலவில் முதல்கட்டமாக 100 ஏரிகளில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றது. இதில், 56 ஏரிகள் தயார் நிலையில் இருக்கிறது.

இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உபரி நீரை ஏரிகளில் நிரப்ப முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதனடிப்படையில், இன்று காலை 7 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, சேலம் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் ஆகியோர் முன்னிலையில் திப்பம்பட்டியில் உள்ள நீரேற்றும் நிலையம் மூலம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக எம்.காளிபட்டியில் உள்ள ஏரியில் நீர் நிரம்பி பின்னர் படிப்படியாக 56 ஏரிகளுக்கும் இந்த தண்ணீர் செல்லவுள்ளது. இத்திட்டத்தின் காரணமாக எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், ஓமலூர் ஆகிய பகுதிகளில் வசிக்க கூடிய விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

இதற்கிடையே, கரையோர பகுதி மக்களுக்கு ஏற்கனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், பல குடும்பத்தினா் கரையோர வீடுகளில் இருந்து பாதுகாப்பாக வெளியேறி சென்றுவிட்டனர். எனினும் ஒருசிலர் தங்கள் வீடுகளிலேயே தங்கியிருந்தனர். இப்போது அணையிலிருந்து உபரிநீா் திறக்கப்பட்டதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீா்மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கியது.

இதையடுத்து, வீடுகளுக்குள் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டதால், பவானியில் காவிரி கரையோரத்தில் வசிக்கும் 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் உடைமைகளுடன் நேற்றிரவு இரவு பாதுகாப்பான, மேடான பகுதிகளுக்கு வெளியேறி சென்றனர். பீரோ, கட்டில், டிவி மற்றும் உடைமைகளை நண்பா்கள், உறவினா்கள் உதவியுடன் பாதுகாப்பான பகுதிக்கு எடுத்து சென்றனர். இதனால் கரையோர பகுதிகள் பரபரப்பாக காணப்பட்டன. கரையோர பகுதிகளை சோ்ந்த மக்கள் பவானி நகராட்சி, பசுவேஸ்வரா் தெரு தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்ட முகாமில் தஞ்சம் அடைந்துள்ளனர். அதேபோல, அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சி பகுதிகளிலும் கரையோர மக்கள் உடைமைகளுடன் வெளியேற்றப்பட்டு, மேடான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

Read More : சிறிய முதலீடு அதிக லாபம்..!! இந்த திட்டத்தில் லட்சங்களை சம்பாதிக்கலாம்..!! எப்படி தெரியுமா..?

Tags :
Advertisement