காலாவதியான சாக்லேட் சாப்பிட்ட 1.5 வயது சிறுமி பரிதாப பலி.!! ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சோகம்.!!
Punjab: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் காலாவதியான சாக்லேட்டை சாப்பிட்ட கைக்குழந்தை ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சாக்லேட் மாதிரிகளை ஆய்விற்காக எடுத்துச் சென்ற சுகாதாரத் துறை அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம் லூதியானா நகரை சேர்ந்த 1 1/2 வயது பெண் குழந்தை பாட்டியாலா நகரில் வாங்கிய சாக்லேட் சாப்பிட்டதை தொடர்ந்து ரத்த வாந்தி எடுத்து பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தக் குழந்தை பஞ்சாப்(Punjab) மாநிலம் லூதியானா நகரில் தனது குடும்பத்தாருடன் வசித்து வந்திருக்கிறது. இந்நிலையில் பாட்டியாலா நகரில் இருந்து வாங்கி வரப்பட்ட காலாவதியான சாக்லேட்டை சாப்பிட்ட சிறிது நேரத்தில் குழந்தை நோய்வாய் பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தை இறந்ததை தொடர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய சுகாதாரத் துறை அதிகாரிகள் பாட்டியாலா நகரில் உள்ள கடைக்கு சென்று சாக்லேட் மாதிரிகளை ஆய்விற்காக கைப்பற்றி இருக்கின்றனர். மேலும் இந்த கொடூர சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையும் உறுதியளித்திருக்கிறது.