முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஹைதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு வழக்கு.! முக்கிய குற்றவாளிக்கு மரண தண்டனை.! NIA சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.!

02:53 PM Feb 12, 2024 IST | 1newsnationuser4
Advertisement

இந்தியன் முஜாஹிதீன் (ஐஎம்) என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்ததற்காக அஜாஸ் ஷேக்கை உத்தரப் பிரதேசத்தில் உள்ள சஹாரன்பூரில் இருந்து செப்டம்பர் 6, 2014 அன்று , டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்தது. பிப்ரவரி 13, 2010 அன்று நடந்த ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பில், அஜாஸ்சின் பங்கும் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2013இல் ஹைதராபாத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு முக்கிய காரணமாக இருந்த அஜாஸ் ஷேக்கிற்கு, தற்போது என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

Advertisement

புனேவில் பிபிஓ ஒன்றில் வேலை பார்த்து வந்த அஜாஸ், பிப்ரவரி 15, 2014 அன்று பெங்களூருக்கு நேர்காணலுக்கு செல்வதாக சொல்லி மாயமானார். அவரது பெற்றோர் அவரைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி அன்று புகார் அளித்தனர். ஆனால் அஜாஸ், செப்டம்பர் 6, 2014 அன்று, இந்தியன் முஜாஹிதீன் என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்ததற்காக கைது செய்யப்பட்டார்.

நாடு முழுவதும் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணமான, கர்நாடகாவைச் சேர்ந்த யாசின் பட்கலை, ஆகஸ்ட் 2013 இல் இந்தியா-நேபாள எல்லையில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். யாசின் பட்கல் மற்றும் அஜாஸுக்கு, பயங்கரவாத அமைப்பான இந்தியன் முஜாஹிதீனுடன் தொடர்பு இருப்பதை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கண்டுபிடித்தது.

பிப்ரவரி 21, 2013 அன்று, ஹைதராபாத்தில் உள்ள தில்சுக் நகர் சந்தையில் நடந்த நடந்த இரட்டை குண்டு வெடிப்புகளில் இவர்களின் பங்கும் இருந்ததால், மற்ற இந்தியன் முஜாஹிதீன் செயல்பாட்டாளர்கள் பட்டியலில் இவர்களையும் சேர்த்தது. ஹைதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளிகளான, யாசின், அஜாஸ் மற்றும் மூன்று பேருக்கு 2016 டிசம்பரில், சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கான வெடி மருந்துகளை, அஜாஸ் யாசினிடம் கொடுத்தது தெரியவந்துள்ளது. இந்த வெடி விபத்திற்கான தளங்களையும் இருவரும் சேர்ந்து முடிவு செய்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த திட்டங்களை செயல்படுத்த தேவைப்பட்ட மொபைல் கைபேசி, சிம் கார்டு மற்றும் வாடகை தங்குமிடங்களை ஏற்பாடு செய்வது, WUMT பணப் பரிமாற்றங்களைச் சேகரிப்பது, வாடகைக்கு அறைகளைப் பெறுதல் மற்றும் தொழில்முறை கல்வி நிறுவனங்களில் சேர்வது போன்றவற்றில் அந்த செயல்பாட்டாளர்களுக்குத் தேவையான போலி ஐடிகளைத் தயாரிப்பது போன்று பல வேலைகளில் அஜாஸ் பங்கு வகித்தார் என்று டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாசின் கைது செய்யப்பட்ட பிறகு தனது பெயரை வெளியிட கூடும் என பயந்த அஜாஸ் தனது மறைவிடங்களை மாற்றிக் கொண்டே இருந்தார். இந்தியன் முஜாஹிதீனின் அறிவுரைப்படி கணினி தொழில்நுட்பத்திலும் அஜாஸ் தேர்ச்சி பெற்றார். பின்னர் அந்த பயங்கரவாத அமைப்பின் ஊடக மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவராக பொறுப்பேற்றார்.

திருமணமாகி அஜாஸ் குடும்பத்துடன் தனியாக வசித்து வந்தார். கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி புனேயில் அவரது பெற்றோர் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி, கடன் சுமையால் அஜாஸ் காணாமல் போனதாக கூறியுள்ளனர்.

மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) கடந்த செப்டம்பர் 2010ல், ஐஎம் நிறுவனர்களான ரியாஸ் மற்றும் இக்பால் பட்கல், மற்றும் லஸ்கர்-இ-தொய்பாவின்(LeT) கமாண்டர்கள் ஃபயாஸ், காக்சி, அபு ஜுண்டால் என்கிற ஜபியுதீன் அன்சாரி, ஹிமாயத் பெய்க் ஆகியோரை கைது செய்தது. 2012 ஜூன் 25 அன்று சவுதி அரேபியாவிலிருந்து இந்தியாவுக்கு அபு ஜுண்டால் நாடு கடத்தப்பட்டார்.

உத்கிரில் உள்ள குளோபல் இன்டர்நெட் கஃபேவில், யாசின் மற்றும் மொஹ்சின் சௌத்ரி பெய்க்கின் உதவியுடன் வெடிகுண்டை சேகரித்துள்ளனர். பிறகு யாசினால் ஜெர்மன் பேக்கரியில் அந்த வெடிகுண்டு வைக்கப்பட்டு இருக்கிறது என்று ஏடிஎஸ் தெரிவித்துள்ளது. யாசினின் வழக்கு விசாரணை தற்போது பூனே சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

Tags :
bomb blastGerman bakery bomb blastIMpolice investigationTerrorist
Advertisement
Next Article