முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஹமாஸ் அமைப்பை வேரோடு அழிக்கும்வரை போர் தொடரும்!… இஸ்ரேல் திட்டவட்டம்!

06:31 PM Dec 13, 2023 IST | 1newsnationuser3
Advertisement

ஹமாஸ் அமைப்பை வேரோடு அழிக்கும் வரை, இன்னும் பல மாதங்களுக்கும், அதை தாண்டி நீண்ட காலத்திற்கும் போரை தொடர தயாராக இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

Advertisement

பாலஸ்தீனத்தின் காசாவில் இஸ்ரேல், ஹமாஸ் படையினர் இடையேயான போர் 2 மாதத்தை தாண்டி நீடிக்கிறது. இதுவரை இப்போரில், 18,200 பேர் பலியாகி விட்டனர். தற்போது தெற்கு காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர்.
பாலஸ்தீன மக்கள் மனிதாபிமான உதவிகள் கிடைகாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு உதவிகள் கிடைக்க வேண்டும். பிணைக்கைதிகள் விடுவிக்க வேண்டும் என ஐ.நா. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பெரும்பாலான உலக நாடுகளும் இதை வலியுறுத்துகின்றன.

அரபு நாடுகள் ஏற்கனவே இது தொடர்பான தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தன. அப்போது அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கப்படவில்லை என பெரும்பாலான நாடுகள் விமர்சனம் செய்திருந்தன. இந்த நிலையில்தான் தற்போது ஐ.நா.வில் உடனடியாக காசாவில் போர் நிறுத்தம் தேவை என மீண்டும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தில் உடனடியாக நிபந்தனையின்றி பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும், மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 153 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரியா உள்ளிட்ட 10 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. அர்ஜென்டினா, உக்ரைன், ஜெர்மனி உள்ளிட்ட 23 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன. ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்படும் அளவிற்கு சட்டப்பூர்வமாக எடுத்துக் கொள்ளப்படாது. உலக மக்களுக்கு ஒரு சம்பவத்தில் உலக நாடுகள் எடுக்கும் முடிவை இதன் மூலமாக வலியுறுத்த மட்டுமே செய்ய முடியும்.

இந்தநிலையில், எகிப்து எல்லையை ஒட்டிய ரபா நகரில் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 20 பேர் கொல்லப்பட்டனர். இதற்கிடையே, காசாவில் இருந்து ஹமாசை வேரோடு அழிக்கும் வரை எவ்வளவு மாதம் ஆனாலும், நீண்ட காலத்திற்கும் போரை தொடர்வதற்கு தயாராக இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேல், ஹமாஸ் இருதரப்பை மத்தியஸ்தம் செய்து வைக்கும் கத்தார் அரசு, ‘‘ போரை நிறுத்துவதற்கும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஆனால் போர் நிறுத்தம் ஏற்படுத்துவதற்கு சாதகமான சூழல் இல்லை’’ என கூறி உள்ளது.

Tags :
இஸ்ரேல் திட்டவட்டம்போர் தொடரும்ஹமாஸ்
Advertisement
Next Article