மாநில முதல்வரை இப்படிதான் நடத்துவீர்களா? - மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்..!!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேச அனுமதிக்கப்படாததற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், டெல்லி ராஷ்டிரபதி பவன் கலாச்சார மையத்தில் 9வது நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் இன்று (ஜூலை 27) நடைபெற்று வருகிறது. நிதி ஆயோக் கூட்டத்தில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் முதல்வர்கள் பங்கேற்றுள்ள நிலையில், இந்தியா கூட்டணி முதல்வர்கள் புறக்கணித்தனர். எனினும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டார். தனது மாநிலத்தின் பிரச்னைகளை, குரல்களை கூட்டத்தில் எடுத்துரைக்கச் செல்கிறேன் என்று மம்தா தெரிவித்திருந்தார்.
இன்று நடைபெற்ற ஆயோக் கூட்டத்தில் 5 நிமிடம் மட்டுமே பேச முடிந்ததாகவும், தொடர்ந்து பேசுகையில், தனது மைக் ஆஃப் செய்யப்பட்டு விட்டதாகவும் மேற்கு வங்க்க முதலமைச்சர் குற்றம் சாட்டினார். தொடர்ந்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேச அனுமதிக்கப்படாததற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், " ஒரு மாநிலத்தின் முதல்வரை நடத்தும் விதமா இது? ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளும் ஓர் அங்கம் என்பதை மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு புரிந்துகொள்ள வேண்டும். கூட்டாட்சியில், அனைவரது கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்' என்று தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
Read more ; Digital Marketing | டிஜிட்டல் மார்க்கெட்டிங் திறன்களை எவ்வாறு மேம்படுத்தலாம்? முழு விவரம்!!