விராட் கோலியின் டயட் ரகசியத்தை போட்டுடைத்த மனைவி..!! 10 வருஷமா இதை தொடவே இல்லையாம்..!! இந்த விஷயத்தில் சமசரமே கிடையாதாம்..!!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பல சாதனைகளை படைத்திருந்தாலும், நம்பர் ஒன் வீரராக இன்றளவும் இருப்பதற்கு அவருடைய உணவுப் பழக்கமும், உடல் தகுதியும் தான் காரணம் என்றே சொல்லலாம். விராட் கோலியின் உணவு பழக்கம் என்ன? அவர் எப்படி இவ்வளவு உடல் தகுதியுடன் இருக்கிறார் என்பது குறித்து அவருடைய மனைவி அனுஷ்கா ஷர்மா கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, விராட் கோலியின் டயட் குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ”நான் இதுகுறித்து உண்மையாக பதிலளிக்க விரும்புகிறேன். உடல் தகுதி மற்றும் உணவு என வந்துவிட்டால் விராட் கோலி 100 சதவீதம் ஒழுக்கத்தை கடைபிடிப்பார். உணவுப் பழக்கமும் உடல் தகுதியும் மிகவும் முக்கியம்.
இதை சினிமாத்துறை கலைஞர்களும் பின்பற்றி வருகின்றனர். விராட் கோலி காலையில் எழுந்த உடன் கண்டிப்பாக கார்டியோ உடற்பயிற்சிகளை செய்வார். இல்லையென்றால், வலு தூக்கி உடற்பயிற்சி செய்வார். இதை செய்ய கண்டிப்பாக தவறமட்டார். பிறகு என்னுடன் சில நேரம் கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்வார். உணவு பழக்கத்தில் விராட் கோலி போல் யாராலும் இருக்க முடியாது.
தின்பண்டங்களுக்கு இடமே கொடுக்க மாட்டார். இனிப்பு நிறைந்த கூல்ட்ரிங்க்ஸை அவர் எடுத்துக் கொண்டதே இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக பட்டர் சிக்கன் கூட சாப்பிட்டது கிடையாது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? எல்லாவற்றிற்கும் மேலாக விராட் கோலிக்கு தூக்கம் என்பது மிகவும் முக்கியம். அதில் அவர் சமரசமே செய்ய மாட்டார். சரியான நேரம் தூங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்.
தூக்கம் சரியாக இருந்தால் மட்டுமே சிறந்த முறையில் செயல்பட முடியும். தூக்கத்தை மட்டும் தான் நமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும் என்று விராட் கோலி என்னிடம் அடிக்கடி சொல்வார். உணவு பழக்கங்கள், உடற்பயிற்சிகளை விராட் கோலி தொடர்ந்து செய்வதால் தான் இன்று அவர் உலகின் சிறந்த விளையாட்டு வீரராக மட்டுமின்றி, மற்ற நபர்களுக்கும் ஊக்கத்தை கொடுக்கும் நபராக இருந்து வருகிறார்” என்று மனைவி அனுஷ்கா ஷர்மா கூறியுள்ளார்.
Read More : பொது இடங்களில் மாட்டிறைச்சி உண்ண தடை..!! உடனே அமலுக்கு வருவதாக முதல்வர் அறிவிப்பு..!!