முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வாடகைத்தாய் முறை கேவலமானது!…. அதை தடை செய்யவேண்டும்!… போப் பிரான்சிஸ் கருத்து!

09:35 AM Jan 10, 2024 IST | 1newsnationuser3
Advertisement

உலக அமைதிக்கும் மனிதர்களின் கண்ணியத்துக்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில் உள்ள வாடகைத்தாய் முறையை தடை செய்யவேண்டும் என்று போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

குழந்தையின்மையை போக்க ஏராளமான மருத்துவ தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்டன. அவற்றில் ஒன்றுதான் வாடகைத்தாய் அல்லது பதிலித்தாய் எனும் முறை. ஆங்கிலத்தில் surrogacy என்று கூறப்படுகிறது. ஒரு பெண் மற்றொரு பெண்ணுக்காக தன்னுடைய கர்ப்பப்பையை பயன்படுத்தி குழந்தை பெற்றெடுக்கும் முறையே வாடகைத்தாய் எனப்படுகிறது. குழந்தை பிறந்த பிறகு அதை பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். உடல்ரீதியாக குழந்தை பெற்றெடுக்க முடியாத பெற்றோருக்காக இந்த முறை கொண்டு வரப்பட்டது. சமீப காலமாக வாடகைத்தாய் மூலமாக குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் போக்கு உலக அளவில் அதிகரித்து விட்டது.

இந்த நிலையில், வாடகைத்தாய் முறைக்கு சர்வதேச அளவில் தடை கொண்டு வர வேண்டும் என்று போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார். ரோம் நகரில் வெளியுறவு கொள்கை தொடர்பாக போப் பிரான்சிஸின் உரையில் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது. அதில், குழந்தை என்பது பரிசுப்பொருள் போன்றது, வணிக ஒப்பந்தத்தின் அமைவதல்ல என்று கருத்து தெரிவித்தார். மேலும், வாடகைத்தாய் முறை இழிவானது என்று விமர்சித்துள்ள போப் பிரான்சிஸ், வாடகைத்தாய் முறை அமைதி மற்றும் மனித கண்ணியத்திற்கு அச்சுறுத்தலானது என்றும் சாடியுள்ளார்.

Tags :
bannedBob FrancisSurrogacy system is disgustingகேவலமானதுதடை செய்யவேண்டும்போப் பிரான்சிஸ்வாடகைத் தாய் முறை
Advertisement
Next Article