’ரேஷன் அட்டைதாரர்களை திருப்பி அனுப்பக் கூடாது’..!! ’இதை பயன்படுத்தி பொருட்களை வழங்குங்கள்’..!! அதிரடி உத்தரவு..!!
தமிழ்நாட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மலிவு விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுவதால், ஏராளமான மக்கள் இதன் மூலம் பயன்பெற்று வருகின்றனர். அதேசமயம், ரேஷன் கடைகளில் குளறுபடிகளை தவிர்க்கும் வகையில், ரேஷன் அட்டைதாரர்கள் நேரில் வந்து கைரேகை வைத்தால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் எனவும், கைரேகை பதிவு கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, கைரேகை பதிவிற்காக ரேஷன் கடைகளுக்கு வரும்படி யாரையும் கட்டாயப்படுத்த கூடாது என்றும் குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கே நேரில் சென்று கைரேகை பதிவு செய்யும் பணியை ஊழியர்கள் முடிக்க வேண்டும் என்று முன்னதாக அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. இதனால் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், ரேஷன் கடைகளில் விரல் ரேகை சரிபார்ப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்க அதிக நேரம் காத்திருக்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. இதனால் தான், விரல் ரேகை சரிபார்ப்பில் ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், விரல் ரேகை பதிவாகவில்லை என்றாலும், கார்டுதாரர்களை திருப்பி அனுப்பாமல் ஸ்கேன் செய்து, பொருட்களை விரைவாக வழங்க வேண்டுமென ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read More : அதிர்ச்சி..!! அழகு சாதனப் பொருட்கள், காலணிகள், கைக்கடிகாரங்களின் விலை உயர வாய்ப்பு..? என்ன காரணம் தெரியுமா..?