ரூ.165 கோடியை கையில் அணிந்திருந்த கோடிஸ்வரர் மனைவி.... பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த தொழிலதிபர்...
மெட் கலா பேஷன் நிகழ்ச்சியில் சுமார் 165 கோடி ரூபாய் மதிப்புள்ள மோதிரத்தை அணிந்து வலம் வந்தார் சுதா ரெட்டி.
அமெரிக்காவில் ஆண்டுதோறும் ஏக்கப்பட்ட பேஷன் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதில், ஒன்று தான் மெட் கலா பேஷன் நிகழ்ச்சி. இதில், ஏகப்பட்ட ஹாலிவுட், பாலிவுட் நட்சத்திரங்கள் இணைந்து விதவிதமான உடை அணிந்து கெத்து காட்டுவார்கள்.
சர்வதேச அளவில் நடைபெறும் இதில் வித்தியாசமான உடைகள் அணிந்து கொண்டு உலகளவில் பிரபலமான மாடல்கள், நடிகைகள், தொழிலதிபர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். அந்த வகையில், இந்தியாவின் மிக பெரிய தொழிலதிபரும், கோடீஸ்வரர் மேகா கிருஷ்ணா ரெட்டியின் மனைவியுமானவர் சுதா ரெட்டி. ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு MEIL என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இவர் 2024ம் ஆண்டுக்கான மெட் கலா பேஷன் ஷோ நிகழ்ச்சியில் வெள்ளை நிறத்திலான கவுண் அணிந்து ஸ்டைலாக தோன்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்த நிகழ்விற்காக 'Amore Eterno' என்ற 180 காரட் வைர நெக்லஸை அணிந்து அனைவரின் பார்வையும் ஈர்த்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் அவர் 2 வைர மோதிரங்களையும் அணிந்திருந்தார். அதன் மதிப்பு சுமார் 165 கோடி ரூபாயாகும் என கூறப்படுகிறது. இதுவே தற்போது இணையத்தில் பேசு பொருளாகி வருகிறது.
இதேபோல், கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற மெட் கலா பேஷன் நிகழ்ச்சியில் இவர் 250 கிலோவிலான தங்க ஆடை அணிருந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Karnataka | காங்கிரசுக்கு எதிராக பாஜக சித்தரித்த வீடியோ.!! உடனடியாக நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவு.!!