ராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டி விடுமுறை அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு...!
ராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டி, வரும் 22ம் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவையொட்டி புதுச்சேரியில் நாளை அரசு விடுமுறை விடப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பக்தர்கள் காணொலியில் காண புதுச்சேரி, காரைக்கால் கோயில்களில் ஏற்பாடு செய்ய இந்து அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அயோத்திராமர் கோயிலில் நாளை சிலை பிரதிஷ்டை விழா நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு, அன்றைய தினம் அரை நாள் விடுப்பு வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஊழியர்களிடமிருந்து வந்த அதிகப்படியான கோரிக்கை காரணமாக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல JIPMER மருத்துவர் கல்லூரிக்கும் விடுமுறையானது வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டி, வரும் 22ம் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு அவசர வழக்காக இன்று விசாரிக்கப்பட வாய்ப்பு உள்ளது.