For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'மாயமாகும் சேமிப்பு..' இந்திய மக்கள் பணத்தை என்ன செய்கிறார்கள்? வெளியான அதிரடி ரிப்போர்ட்..!

03:44 PM May 08, 2024 IST | Mari Thangam
 மாயமாகும் சேமிப்பு    இந்திய மக்கள் பணத்தை என்ன செய்கிறார்கள்  வெளியான அதிரடி ரிப்போர்ட்
Advertisement

2022ஆம் நிதியாண்டில் ரூ.17.1 டிரில்லியனாக இருந்த நிகர குடும்ப சேமிப்பு, 2023ஆம் நிதியாண்டில் ரூ.14.2 டிரில்லியனாகக் குறைந்துள்ளது என்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

Advertisement

பொதுவாக இந்திய மக்கள் தங்களுடைய சேமிப்பை அதிகளவில் வங்கிகளில் பாதுகாப்பாக வைக்கும் மனநிலை தான் அதிகம். ஆனால் முதல் முறையாக இந்திய மக்களின் சேமிப்பு பெரிய அளவில் குறைந்துள்ளது என்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அறிவித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு ரூ.17.1 டிரில்லியனாக இருந்த நிகர குடும்ப சேமிப்பு, கடந்த 2023ஆம் ஆண்டில் ரூ.14.2 டிரில்லியனாகக் குறைந்துள்ளது.

HDFC பேங்கின் பொருளாதார நிபுணர் சாக்ஷி குப்தா இதுகுறித்து கூறியதாவது, "இந்தியாவில் உள்ள குடும்பங்களில், செலவு அதிகமாக இருப்பதால், சேமிப்பு குறைந்திருக்கிறது. உதாரணமாக, வீட்டுவசதியைக் கூறலாம். 2023ஆம் நிதியாண்டில் வீட்டுக் கடனின் விகிதம் 7.1 சதவீதம். இது 2022ஆம் நிதியாண்டோடு ஒப்பிடுகையில் சற்று அதிகம் தான். கோவிட் காலத்திற்கு முந்தைய ஆண்டு, அதாவது 2019ஆம் நிதியாண்டில், 6.2 சதவீதமாக இருந்தது” என்றார்.

மேலும், 2023ஆம் நிதியாண்டில், குடும்பங்களின் நிகர சேமிப்பு 5.3 சதவீதமாக இருந்தது. இது சுமார் ஐம்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக் குறைந்த விகிதமாகும். இதில் 2012ஆம் நிதியாண்டு முதல் 2022ஆம் நிதியாண்டு வரையிலான ஆண்டுகளில், கோவிட்-19 பாதிக்கப்பட்ட 2021ஆம் ஆண்டைத் தவிர்த்து, குடும்பங்களின் நிகர சேமிப்பு 7 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை இருந்தது. அதேபோல் 2023ஆம் நிதியாண்டில், குடும்பங்களின் மொத்த சேமிப்பு ரூ. 29.7 டிரில்லியனாக உள்ளது. ஆனால் மக்களின் நிதிப் பொறுப்புகளில் சுமார் 73 சதவீதம் அதிகரித்துள்ளது.

தற்போது மக்கள் தங்களுடைய செலவுகளுக்காக கடன் வாங்குவதால், சேமிப்பு குறைந்து வருகிறது. அதிக அளவில் கடன் வாங்கும்போது மக்கள் சந்திக்கும் பிரச்சனை என்னவென்றால், அதற்கு வட்டியும் முதலுமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாகவே சேமிப்பு குறைந்திருக்கிறது என்று கூறப்படுகிறது.

அதேபோல் குடும்பங்கள் கடன் வாங்குவது அவர்களுக்கு பிற்கால முதலீடாக அமையும். சான்றாக, ஒருவர் கடன் வாங்கி வீடு கட்டுகிறார் என்று வைத்துக் கொள்வோம். பிற்காலத்தில், அவர் வாடகை பிரச்சினை இல்லாமல், அதனைக் கொண்டு வாழ முடியும். மக்கள் வாங்கும் கடன் துன்பத்திற்கானது மட்டுமல்ல. எதிர்காலத்தில் வரவிருக்கும் வேலை வாய்ப்பு, வருமானம் போன்ற நம்பிக்கையின் அடையாளமாக தான் இது உள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

Tags :
Advertisement