மாணவர்களுக்கு இலவச பயிற்சித் திட்டம்...! ஐஐடி மெட்ராஸ் சூப்பர் அறிவிப்பு...!
ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஐஐடிஎம் ப்ரவர்த்தக் இணைந்து பி.எஸ்சி., பி.சி.ஏ. மாணவர்களுக்கு இலவச பயிற்சித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஐஐடி மெட்ராஸ் ப்வர்த்தக் டெக்னாலஜிஸ் ஃபவுண்டேஷன் நிறுவனம், மாணவர்களுக்கு தொழில் துறைக்குத் தேவையான தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் வகையில் பயிற்சி அளிக்க புதிய முன்முயற்சியைத் தொடங்கியுள்ளது. தகவல் தொழில்நுட்பம்/ உள்கட்டமைப்பு மற்றும் தகவல் உதவிமையம் போன்றவற்றுக்கான பயிற்சியில் கவனம் செலுத்தப்படும். லைட்ஸ்ரோம் (https://lightstorm.net/) நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு நிதியில் இருந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நெட்வொர்க்கிங் எசன்ஷியல்ஸ், கிளவுட் ஃபண்டமெண்டல்ஸ், டிக்கெட்டிங் கருவிகள், லினக்ஸ், வின்டோஸ் அடிப்படைகள், ஸ்டோரேஜ் அண்ட் பேக்அப் அடிப்படைகள், தனித்திறன்கள் போன்றவை இந்த பாடநெறியில் இடம்பெறும். பயிற்சி பெறும் மாணவர்களை ஐஐடிஎம் ப்ரவர்த்தக் தேர்வு செய்து, அவர்களுக்கு மேற்கண்ட அம்சங்களில் தொழில்துறைக்கு ஏற்ற வகையில் பயிற்சி அளித்து தயார்படுத்தும்.
இந்த பயிற்சித் திட்டம் ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூன்12 ஆகும். விருப்பமுள்ள மாணவர்கள் பின்வரும் இணையதள முகவரியில் பதிவு செய்துகொள்ளலாம். https://forms.gle/7RhAKgrGRgwr17zd6