போலி சுங்கச் சாவடி அமைத்து ரூ.75 கோடி மோசடி...! ஒன்றரை ஆண்டு கழித்து சிக்கிய கும்பல்...!
குஜராத்தில் போலி சுங்கச் சாவடி அமைத்து ஒன்றரை ஆண்டுகளாக அரசு அதிகாரிகள் மற்றும் மக்களை ஏமாற்றி ரூ.75 கோடி மோசடி செய்திருப்பது அம்பலமாகி உள்ளது.
குஜராத் மாநிலத்தில் போலி சுங்கச் சாவடி அமைத்து ஒன்றரை ஆண்டுகளாக அரசு அதிகாரிகள் மற்றும் மக்களை ஏமாற்றி ரூ.75 கோடி மோசடி செய்துள்ளனர். தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தில் போலி சுங்கச் சாவடி அமைத்து, அதற்கு தனியாக சாலை வசதி ஏற்படுத்தி நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை பாதை மாற்றி விட்டுள்ளனர்.
மேலும் அந்த பாதையில் உள்ள வர்கசியா சுங்கச் சாவடி கட்டணத்தில் 50% மட்டுமே இங்கு வசூல் செய்யப்பட்டு வந்ததால், இதுகுறித்து யாரும் புகார் தெரிவிக்கவில்லை. நெடுஞ்சாலையில் இருந்து வாகனங்கள் திருப்பி விடப்படுவதாக சமிபத்தில் மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடந்த ஆய்வில் அது போலியான சுங்கச்சாவடி என்பது அம்பலமானது. தனியார் நிறுவன உரிமையாளர் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.