பெண்களின் மார்பகங்கள் வெவ்வேறு அளவில் இருப்பது ஏன்? காரணமும் விளக்கமும்!!
ஒரு பெண்ணுக்கு மார்பகம் வளரத்தொடங்கும் காலம் முதல், பூப்படைதல், கர்ப்பகாலம் என்று ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மார்பகத்தின் அளவு வேறுபட்டுக்கொண்டே இருக்கும்.
பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் ஒரு மிகப்பெரிய சந்தேகம் என்னவென்றால், மார்பங்கள் ஒரே அளவில் இல்லையே என்பதுதான். இரண்டு மார்பகங்களும் ஏன் ஒரே அளவில் இருப்பதில்லை என்ற சந்தேகம் எழும். அது எதனால் என்பதை விரிவாக பார்க்கலாம்.
ஒரு பெண்ணின் இரண்டு மார்பகங்களுமே ஒரே அளவில், ஒரே வடிவத்தில் இருக்காது. ஒரு மார்பகம் சிறிய அளவிலும் ஒன்று பெரிய அளவிலும் இருக்கும். அதாவது மார்பகங்கள் என்பது ஒரே மாதிரி தோற்றம் கொண்டவை கிடையாது.இயற்கையாகவே பெண்களுக்கு மார்பகத்தின் அளவுகள் இப்படித்தான் இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பிரஸ்ட், பூப்ஸ் என்று கூறப்படும் மார்பகங்களில் ஒன்று சிறியதாகவும் ஒன்று பெரியதாகும் இருப்பது பற்றி கவலையே பட தேவை இல்லை. பெரும்பாலானவர்களுக்கு வலது பக்க மார்பகம் பெரிதாகவும், இடது பக்க மார்பகமும் சிறிதாகவும் இருக்கும். இதுவும் இயல்பானதுதான்.
இரண்டு மார்பகங்களுக்கு இடையேயான வேறுபாடு என்பது மிகச் சிறிய அளவில் காணப்படலாம் அல்லது உள்ளாடை அணியும் பொழுது அளவிடக்கூடிய கப் சைஸ் என்று கூறப்படும் அளவில், ஒரு கப் சைஸ் அளவுக்கு கூட பெரியதாக இருக்கலாம். உதாரணமாக வலது பக்க மார்பகம் 32B என்ற அளவிலும், இடது பக்க மார்பகம் 32C என்ற அளவிலும் வேறுபடுவது இயல்பானதுதான். ஆனால் இந்த மாற்றம் திடீரென்று காணப்பட்டால் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.திடீரென்று ஒரு மார்பகத்தின் அளவு சட்டென்று பெரிதாக அல்லது வேறுபட்டு காணப்படுவது ஒரு எச்சரிக்கை அறிகுறியாக நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். மார்பகத்தின் அடர்த்தி குறைவது அல்லது இரண்டு மார்பகங்களும் உள்ள அடர்த்தி மிகவும் வேறுபட்டு காணப்படுவது, மார்பக காம்பிலிருந்து திரவம் வடிவது, உட்புறமாக வளைந்திருப்பது உள்ளிட்ட மாற்றங்கள் காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மற்றப்படி ஒரு பெண்ணின் மார்பகங்கள் இயற்கையாகவே வெவ்வேறு அளவில்தான் இருக்கும் என்பதே உண்மையான கூற்று.
Read More: “வானில் வெடித்துச் சிதறப்போகும் நட்சத்திரம்” வெறுங் கண்ணால் எப்படிப் பார்க்கலாம்?