For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”புருஷனுக்கு எனக்கும் சண்டையின்னு உன்கிட்ட வந்தா இப்படியா பண்ணுவ”..? ஜோதிடரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பெண்..!! கூடவே வந்த 24 வயது இளைஞர்..!!

John Stephen has often asked Kalaiyarasi for money for this. Kalaiyarasi has also done all the remedies he suggested.
02:20 PM Jan 20, 2025 IST | Chella
”புருஷனுக்கு எனக்கும் சண்டையின்னு உன்கிட்ட வந்தா இப்படியா பண்ணுவ”    ஜோதிடரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பெண்     கூடவே வந்த 24 வயது இளைஞர்
Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பெருவிளை அருகே கோட்டவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஸ்டீபன் (58). இவர், அதே பகுதியில் நாட்டு வைத்தியம் மற்றும் ஜோதிடம் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தான், இவர் ஜனவரி 8ஆம் தேதி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், இரணியல் அருகே கட்டிமாங்கோடு பகுதியை சேர்ந்த கலையரசி (43) என்பவர், கூலிப்படையை ஏவி ஸ்டீபனை கொலை செய்தது அம்பலமானது. கலையரசியின் திட்டப்படி, நெல்லை மாவட்டம் கருவேலங்குளத்தை சேர்ந்த 25 வயதாகும் நம்பிராஜன் என்ற இளைஞர், நட்புடன் பழகி ஜான் ஸ்டீபனை தீர்த்துக்கட்டியது போலீசாருக்கு தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து கலையரசி மற்றும் நம்பிராஜன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கலையரசி கூறிய வாக்குமூலம்படி, கலையரசிக்கும், அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஜாதகத்தில் ஏதாவது குறைபாடு இருக்கிறதா? பரிகாரம் செய்தால் பிரச்சினை தீருமா? என்று யோசித்து, ஜான் ஸ்டீபனை அணுகியுள்ளார். அப்போது ஜான் ஸ்டீபன் ஜாதகத்தில் குறைபாடு இருப்பதாக கூறியுள்ளார்.

அவற்றை பரிகாரம் மூலம் தீர்த்தால் கணவருடன் பிரச்சனை வராது என்று தெரிவித்துள்ளார். இதற்காக கலையரசியிடம் ஜான் ஸ்டீபன் அடிக்கடி பணம் கேட்டு வாங்கியுள்ளார். அவர் கூறிய பரிகாரங்களை எல்லாம் கலையரசியும் செய்து வந்துள்ளார். ஆனால், பிரச்சனை தீர்ந்தபாடில்லை. இதுகுறித்து ஜாண் ஸ்டீபனிடம் கேட்டபோது, அவர் மழுப்பலாக பதிலளித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கலையரசி, ஸ்டீபன் தான் ஏதோ மாந்திரீகம் செய்து எனது கணவரை என்னிடம் இருந்து நிரந்தரமாக பிரிக்க திட்டமிடுகிறார் என்று சந்தேகப்பட்டுள்ளார்.

அதனால், அவரை கொலை செய்ய திட்டமிட்டு, உறவினர் ஒருவர் மூலம் நம்பிராஜன் அறிமுகமாகியுள்ளார். கன்னியாகுமரியில் மீன்கடை வைத்துள்ள அவர் கலையரசியிடம் ரூ.40,000 கடன் வாங்கினார். அப்போது அவருக்கு பணத்தேவை இருப்பதை அறிந்து கொண்டுள்ளார் கலையரசி. அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி நம்பிராஜனுக்கு பணம் கொடுத்து ஜான் ஸ்டீபனை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார்.

இதற்காக ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார. இதைத் தொடர்ந்து சம்பவத்தன்று தனது திட்டத்தை நம்பிராஜன் செயல்படுத்தினார். முதலில் சந்தேக மரணம் என்று தான் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், பிரேத பரிசோதனையில் இருவருமே சிக்கிக் கொண்டனர். ஜனவரி 8ம் தேதியன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார் நம்பிராஜன்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட கலையரசி, நம்பிராஜன் ஆகிய 2 பேரையும் போலீசார், நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கலையரசி தக்கலை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். நம்பிராஜன் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் அவரும் சிறையில் அடைக்கப்பட்டார்.

Read More : ”எல்லை மீறி போய்டீங்க”..!! ”இனி காணும் பொங்கலுக்கு அரசு விடுமுறை கிடையாது”..!! எச்சரிக்கும் பசுமை தீர்ப்பாயம்..!!

Tags :
Advertisement