முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பிரதமர் மோடி வருகை! சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்!

05:41 PM Apr 08, 2024 IST | Mari Thangam
Advertisement

பிரதமரின் வாகனப் பேரணியையொட்டி, சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

2024 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி நாளை தமிழ்நாடு வருகிறார். சென்னையில் பாஜக சார்பில் போட்டியிடும் தென்சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்திர ராஜன், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி செல்வம், வட சென்னை வேட்பாளர் பால் கனகராஜ் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் பிரதமர் மோடி, பாண்டிபஜார் முதல் தேனாம்பேட்டை வரை வாகனப் பேரணி செல்ல உள்ளார். 

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது 7 வது முறையாக தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி, சென்னையில் நாளை ரோடு ஷோ-வில் பங்கேற்கிறார்.  இதற்காக 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரோட்-ஷோ நடைபெற உள்ள பகுதிகளில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 144 தடை சட்டத்தின் கீழ் சென்னையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் பாதுகாப்பு பணிகளுக்காக சென்னையில் 22 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்ட அறிவிப்பில், “பிரதமர் நரேந்திர மோடி நாளை(ஏப். 9) மாலை 6 மணிக்கு தி.நகர், தியாகராய சாலையில் நடைபெறும் சாலை அணிவகுப்பு கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக சென்னை வருகிறார்.

சாலை அணிவகுப்பு நடக்கும் பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளான ஜிஎஸ்டி சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, 100 அடி சாலை, அண்ணாசாலை, எஸ்.வி.படேல், காந்தி மண்டபம் சாலை மற்றும் தி.நகர் ஆகிய இடங்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை லேசான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பிற்பகல் 3 மணி முதல், தியாகராய சாலையில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியாகவும், வெங்கட நாராயண சாலை, ஜி.என்.செட்டி சாலை ஆகியவை சாலை அணிவகுப்பு முடியும் வரை வாகன நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள சாலைகளில் வணிக வாகனங்கள் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை இடையிடையே தடை செய்யப்பட்டுள்ளது.

  • பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் இருந்து சுத்திப்பாரா செல்லும் வாகனங்கள்.
  • மவுண்ட் - பூந்தமல்லி சாலையில் இருந்து அண்ணா சாலை செல்லும் வாகனங்கள்.
  • CIPET - அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள்.
    வடபழனியில் -தியாகராய நகர், வள்ளுவர்கோட்டம் நோக்கி செல்லும் வாகனங்கள்.
  • CIPET -விமான நிலையம், காந்தி மண்டபம் நோக்கி செல்லும் வாகனங்கள்.
  • டைடல் பார்க்கில் இருந்து காந்தி மண்டபம் நோக்கி செல்லும் வாகனங்கள்.
  • அண்ணா சிலையில் - மவுண்ட் ரோடு நோக்கி செல்லும் வாகனங்கள்

எனவே வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைய அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tags :
#Bjpelection campaignPM Modipm modi chennai visittraffic change
Advertisement
Next Article