For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"பாயிண்ட் வரட்டும் பேசுவோம்".. மத்திய அரசுக்கு எதிராக 'EPS' மௌனம்.! அதிமுகவுக்கு பின்னடைவு.!

04:11 PM Feb 18, 2024 IST | 1newsnationuser7
 பாயிண்ட் வரட்டும் பேசுவோம்    மத்திய அரசுக்கு எதிராக  eps  மௌனம்   அதிமுகவுக்கு பின்னடைவு
Advertisement

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் தேதிகள் அடுத்த மாதம் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் திமுக அதன் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும் திமுக சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள் நாளை முதல் விருப்பம் மனு தாக்கல் செய்யலாம் எனவும் அறிவித்திருக்கிறது. மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் பாராளுமன்ற தொகுதிகளில் தேர்தல் குறித்த மாநில உரிமையை மீட்பு கூட்டங்களை நடத்தும் படி கழகத் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டிருக்கிறார்.

Advertisement

பாராளுமன்ற தேர்தலுக்காக திமுக அசுர வேகத்தில் பணியாற்றி வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் திமுக வின் பிரதான எதிர்க்கட்சியாக கருதப்படும் அதிமுக இன்னும் கூட்டணி பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்தக் கட்சியுடன் கூட்டணி அணி அமைக்க இருக்கும் கட்சிகள் எது என்பது குறித்த விவரங்களும் இன்னும் உறுதியாக வில்லை. ஆமை வேகத்தில் அதிமுக செயல்பட்டு கொண்டிருப்பதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

கடந்த தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சியுடன் பயணித்த அதிமுக தங்களது தொண்டர்களின் ஆணைக்கு இணங்க பாரதிய ஜனதாவுடன் கூட்டணியை முடித்துக் கொண்டது மேலும் இனி எப்போதும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி(EPS) அறிவித்திருந்தார். மேலும் அவர் செல்லும் இடமெல்லாம் பாரதிய ஜனதா கட்சியுடன் இனி கூட்டணி இல்லை என்பதை நினைவுபடுத்தி வருகிறார் . எனினும் எடப்பாடி பழனிச்சாமியின் மத்திய அரசுக்கு எதிரான மௌனம் அதிமுகவிற்கு பின்னடைவாக அமையும் என அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

இந்த மாத தொடக்கத்தில் இடைக்கால பட்ஜெட் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் தங்களது கண்டனங்களை பதிவு செய்திருந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி பட்ஜெட் குறித்து எந்தவித கருத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறார். பட்ஜெட் தொடர்பாக எதிர்ப்பை தெரிவித்தால் தங்கள் மீது மத்திய அரசு அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கும் என்ற பயத்தில் அவர் மௌனம் காப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக அவரிடம் கேட்கும்போது பாயிண்ட் வரட்டும் பேசலாம் என்று ரீதியில் பாஜக உடன் நாங்கள் கூட்டி இல்லை என்று தொடர்ந்து அதே கருத்தை வலியுறுத்தி வருகிறார். இது அதிமுகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

English Summary
Edappadi palanisamy (EPS) keeps his silent over central govt's interim budget. It will be a big setback for admk.

Advertisement