முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நெருங்கிய பண்டிகை காலம்...! வேகமெடுக்கும் ஜேஎன்.1 COVID வைரஸ்....! மாநில அரசுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு...!

05:32 AM Dec 21, 2023 IST | 1newsnationuser2
Advertisement

நாட்டின் சில பகுதிகளில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு கண்காணிப்பு, கட்டுப்படுத்துதல் மற்றும் மேலாண்மைக்கான பொது சுகாதார அமைப்பின் கொரோனா நிலைமை மற்றும் தயார்நிலையை மறுஆய்வு செய்வதற்கான உயர்மட்டக் கூட்டத்தை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நடத்தினார்.

Advertisement

சீனா, பிரேசில், ஜெர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற உலகெங்கிலும் உள்ள சில நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கையால் ஏற்படும் சவாலைச் சுட்டிக் காட்டிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், கொரோனாவின் புதிய மற்றும் உருமாற்றத்திற்கு எதிராகத் தயாராக இருப்பதன் முக்கியத்துவத்தை விளக்கினார், குறிப்பாக எதிர்வரும் பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு தயாராக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கொரோனா தொற்று ஒழியவில்லை என்பதை மீண்டும் சுட்டிக்காட்டிய அவர் அறிகுறிகள் மற்றும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்காணிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

"முழு அரசு" அணுகுமுறையின் உணர்வில் வளர்ந்து வரும் நிலைமையைச் சமாளிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான கூட்டு முயற்சிகளின் அவசியத்தை வலியுறுத்தினார். நாட்டில் பரவி வரும் புதிய மாறுபாடுகளைச் சரியான நேரத்தில் கண்டறிவதை உறுதி செய்வதற்காக இந்திய சார்ஸ்-கோவ்-2 ஜீனோமிக்ஸ் கன்சார்டியம் (இன்சாகோக்) கட்டமைப்பு மூலம் மாறுபாடுகளைக் கண்காணிக்க தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகளின் முழு மரபணு வரிசைமுறைக்கான கண்காணிப்பு அமைப்பை வலுப்படுத்துமாறு அவர் அறிவுறுத்தினார்.

அனைத்து மாநிலங்களும் விழிப்புடன் இருக்கவும், கண்காணிப்பை அதிகரிக்கவும், மருந்துகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் செறிவூட்டிகள், வென்டிலேட்டர்கள், தடுப்பூசிகள் போதுமான அளவு கையிருப்பை உறுதி செய்யவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வலியுறுத்தினார், பிஎஸ்ஏ ஆலைகள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் சிலிண்டர்கள், வென்டிலேட்டர்கள் போன்றவற்றின் செயல்பாட்டை மதிப்பிடுவதற்கு மத்திய மற்றும் மாநில நிலைகளில் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் மாதிரி ஒத்திகைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார், மத்திய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு அனைத்து உதவிகளும் கிடைக்கும் என்று அவர் உறுதியளித்தார்.

Tags :
central govtcovidcovid variantstate govt
Advertisement
Next Article