For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”நான் பாத்துக்கிறேன்.. என் ரூமுக்கு மட்டும் வா”..!! மின் கட்டணத்தை குறைப்பதாக கூறி பெண்ணை பலாத்காரம் செய்த அதிகாரி..!!

The incident of taking a woman to his office and raping her on the pretext of reducing the electricity bill has caused a shock.
04:38 PM Nov 12, 2024 IST | Chella
”நான் பாத்துக்கிறேன்   என் ரூமுக்கு மட்டும் வா”     மின் கட்டணத்தை குறைப்பதாக கூறி பெண்ணை பலாத்காரம் செய்த அதிகாரி
Advertisement

மின் கட்டணத்தை குறைப்பதாக கூறி தனது அலுவலக அறைக்கு அழைத்துச் சென்று பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் பாஸ்தி மாவட்டத்தில் மின்வாரிய பொறியாளராக வேலை பார்த்து வருபவர் ரவீந்திர குமார். இதற்கிடையே, பெண் ஒருவரின் வீட்டில் மின்சார கட்டணம் வழக்கத்தை விட அதிகம் வந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண், மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று முறையிட்டுள்ளார்.

ஆனால், ரவீந்திர குமார் இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளார். அதாவது, மின்கட்டணத்தை தான் குறைப்பதாக கூறி அந்த பெண்ணை அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அந்தப் பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து ரவீந்திர குமார் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவத்தை ரவீந்திர குமார் தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக சொல்லப்படும் நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கிடையே, மயக்கம் தெளிந்த பின் தனக்கு நேர்ந்த கொடுமைகளை அறிந்த அப்பெண், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, ரவீந்திரகுமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, உண்மை வெளிச்சத்திற்கு வந்ததாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மின் கட்டணத்தை குறைப்பதாக கூறி தனது அலுவலக அறைக்கு அழைத்துச் சென்று பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More : உல்லாசத்தில் மிதந்த கள்ளக்காதல் ஜோடி..!! வீட்டை தாழ்ப்பாள் போட்டு ஊரையே கூட்டிய நபர்..!! கடைசியில் நடந்த பயங்கர ட்விஸ்ட்..!!

Tags :
Advertisement