முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நாம் என்ன ஆயிரம் ஆண்டுகளா வாழப் போகிறோம்..? நான் செத்தால் கூட..!! என்னுடைய ஆசையே இதுதான்..!! உருக்கமாக பேசிய நெப்போலியன்..!!

'Even if I die, it is my wish that those who are with us should think that such a man would have lived with us and gone,' actor Napoleon said.
04:24 PM Sep 04, 2024 IST | Chella
Advertisement

தமிழ் சினிமா உலகில் தனக்கென்று தனி இடம் பிடித்தவர் நடிகர் நெப்போலியன். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹாலிவுட் மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருக்கும் இவர், 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர், தன்னுடைய குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார். இவருக்கு தனுஷ் மற்றும் குணால் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

Advertisement

கடந்த மாதத்தில் அவருடைய மூத்த மகன் தனுஷிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அக்டோபர் மாதத்தில் தன்னுடைய மகனின் திருமணம் நடைபெறவுள்ளதாக அவரே தெரிவித்திருக்கிறார். தன்னுடைய மகன் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், வீடியோ கால் மூலமாகவே திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைபட்டியை சார்ந்த அக்ஷயா என்ற பெண்ணோடு நிச்சயதார்த்தத்தை முடித்து இருந்தார்.

இந்நிலையில், நடிகர் நெப்போலியன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “நான் 16 வயதிலிருந்து அரசியலில் நுழைந்துவிட்டேன். என்னுடைய மாமா கே.என். நேரு அமைச்சராக இருந்தபோது அவருக்கு பிஏவாக நான் இருந்தேன். பிறகு நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்ததால் நடிக்க ஆரம்பித்தேன். ஆனாலும், அரசியலை விட்டு விலகவில்லை. பிறகு எம்.எல்.ஏ-வாகி அமைச்சராகவும் இருந்திருக்கிறேன். ஆனால், என்னுடைய குடும்பத்திற்காக நான் அரசியல் மற்றும் சினிமாவை விட்டுவிட்டு விலகி தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறேன்.

என் அப்பா மற்றும் அம்மாவிற்காக மணிமண்டபத்தையும் கட்டி இருக்கிறேன். நாம் எவ்வளவு காலம் வாழப் போகிறோம். ஆயிரம் ஆண்டுகளா வாழப் போகிறோம். "நான் செத்தால் கூட இப்படி ஒரு மனுஷன் நம்மோடு வாழ்ந்துட்டு போயிருக்காரு என்று நம்மோடு இருப்பவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை" என்று உருக்கமாக பேசியுள்ளார்.

Read More : வாரத்திற்கு 5 பெண்கள்..!! அதுவும் இந்த மாநிலத்தில் தான் அதிகமாம்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Tags :
அமெரிக்காதமிழ் சினிமாநெப்போலியன்
Advertisement
Next Article