தீப்பெட்டி தர மறுத்ததால் தலையில் கல்லை போட்டு காவலாளி கொலை.! இளைஞர் கைது.!
மகாராஷ்டிரம் மாநில தலைநகரான மும்பையின் நவி மும்பை பகுதியில் தீப்பெட்டி தகராறில் காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
நவி மும்பை பகுதியில் இன்று அதிகாலை 2 மணி அளவில் முகமது ஆதில் ஷேக் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வந்த பிரசாத் பனுஷின் என்ற நபரிடம் தீப்பெட்டி கேட்டிருக்கிறார். அதற்கு காவலாளி தீப்பெட்டி தர மறுத்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த முகமது ஷேக் அருகில் இருந்த கல்லை எடுத்து காவலாளியின் தலையில் போட்டு படுகொலை செய்து இருக்கிறார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பகுதி மக்கள் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். பொது மக்களின் தகவல் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இளைஞர் முஹம்மது சேக்கை கைது செய்தனர்.
மேலும் கொலை செய்யப்பட்ட காவலாளியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தீப்பெட்டிகாக காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதில் தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளியிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.