For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தூர்தர்ஷன் ராமர் சீதைக்கு அழைப்பு.! ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் ஸ்பெஷல்.!

08:13 PM Jan 06, 2024 IST | 1newsnationuser7
தூர்தர்ஷன் ராமர் சீதைக்கு அழைப்பு   ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் ஸ்பெஷல்
Advertisement

அயோத்தி நகரம் ராமர் கோவில் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகத்திற்காக பரபரப்பாக தயாராகி வருகிறது. ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மூன்று அடுக்குகளை கொண்டதாக கட்டப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான ராமர் கோவிலின் திறப்பு விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதன் விழா ஏற்பாடுகளை ராமஜென்ம பூமி அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.

Advertisement

ராமர் பிறந்த நேரமாக கணிக்கப்பட்டிருக்கும் 12:20 மணியளவில் கோவிலின் திறப்பு விழா நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்கு நாடு முழுவதிலும் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள் திரைத்துறை பிரபலங்கள் சாமியார்கள் மடாதிபதிகள் உட்பட 8000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த கோவில் திறப்பு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமிதாப்பச்சன் கங்கணா ரணாவத் உட்பட ஏராளமான திரைத்துறை நட்சத்திரங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

இதற்கான விழா ஏற்பாடுகள் மற்றும் அழைப்பு பணிகளையும் ராமஜென்ம பூமி அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கோவில் திறப்பு விழா சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்விற்கு ராமாயணம் தொலைக்காட்சி தொடரில் ராமன் மற்றும் சீதையாக நடித்த நடிகர் மற்றும் நடிகையும் அழைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த அழைப்பு பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் எண்பதுகளில் வெளியான ராமாயணம் தொடர் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்தத் தொடரில் ராமர் கதாபாத்திரத்தில் அருண் கோவில் நடித்திருந்தார். சீதையாக தீபிகா சிக்லியா நடித்திருந்தார். இவர்களது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டதோடு இவர்கள் இருவரையும் ராமர் சீதையைப் போலவே மக்கள் கொண்டாடினர். இந்நிலையில் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு இவர்கள் இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

Tags :
Advertisement