முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

டிசம்பர் 31 வரை எத்தனை கோடி பேர் வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்தனர்...? மத்திய நிதி அமைச்சகம் தகவல்...!

06:20 AM Jan 02, 2024 IST | 1newsnationuser2
Advertisement

டிசம்பர் 31 வரை 8.18 கோடி பேர் வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்துள்ளனர்.

இது குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 2023-2024 ஆம் ஆண்டிற்கான வருமான வரியை 31.12.2023 வரை 8.18 கோடி பேர் தாக்கல் செய்துள்ளனர், கடந்த ஆண்டில் இதே தேதியில் (31.12.2022) 7.51 கோடி பேர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்திருந்தனர். இது கடந்த ஆண்டின் மொத்த வருமான வரி தாக்கல் செய்தவர்களைவிட 9% அதிகமாகும்.

Advertisement

அனைத்து தாக்கல்களிலும் தரவின் கணிசமான பகுதி சம்பளம், வட்டி, ஈவுத்தொகை, தனிப்பட்ட தகவல்கள், டி.டி.எஸ் தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட வரி செலுத்துதல், கொண்டு வரப்பட்ட இழப்புகள், எம்.ஏ.டி கிரெடிட் போன்றவை தொடர்பான தரவுகளுடன் முன்கூட்டியே நிரப்பப்பட்டது. இந்த வசதி பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. இதன் விளைவாக வருமான வரியை இலகுவாகவும் விரைவாகவும் தாக்கல் செய்ய முடிந்தது.

மேலும், இந்த நிதியாண்டின் போது, டிஜிட்டல் மின்-கட்டண வரி செலுத்தும் தளம் - டிஐன்( TIN) 2.0 e-filing இணையதளம் முழுமையாக செயல்பட்டது. இது Internet Banking, NEFT/RTGS, OTC, Debit Card, payment gateway மற்றும் UPI போன்ற மின்னணு முறையில் வரி செலுத்துவதற்கான பயனருக்கு ஏற்ற நடைமுறைகளைச் செயல்படுத்தியது. டிஐஎன் 2.0 இயங்குதளம் வரி செலுத்துவோருக்கு நிகழ்நேர வரிகளை வரவு வைக்க உதவியது, இது வருமான வரி தாக்கல் செய்வதை எளிதாக்கியது.

Tags :
TaxTax return
Advertisement
Next Article