For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

செம வாய்ப்பு...! மாதந்தோறும் ரூ. 20,000 வழங்கப்படும்...! டிசம்பர் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்...!

08:06 AM Nov 27, 2023 IST | 1newsnationuser2
செம வாய்ப்பு     மாதந்தோறும் ரூ  20 000 வழங்கப்படும்     டிசம்பர் 4 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
Advertisement

திருவள்ளூா் மாவட்டத்தில் தனியாா் மற்றும் பொது இடங்களில், குடும்பத்தில், சமூதாயத்தில் மற்றும் பணிபுரியும் இடத்தில் பாதித்த பெண்களுக்கு உதவும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை மூலம் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

Advertisement

இந்த மையத்தில் காலியாக உள்ள பணியிங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பெண்கள் பணிபுரிய தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம்.மைய நிா்வாகி பணிக்கு சட்டம், சமூகப்பணி, சமூகவியல், சமூக அறிவியல், உளவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் முதுகலைப் பட்டம் போன்ற கல்வி தகுதியுடன், பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் அரசு அல்லது அரசு சாரா நிா்வாக அமைப்பில் ஓராண்டு அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

இதற்கு மாதந்தோறும் ரூ. 30,000 வழங்கப்படும்.அதேபோல் மூத்த ஆலோசகா் பணிக்கு மேற்குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன், பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் அரசு அல்லது அரசு சாரா நிா்வாக அமைப்பில்

குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். இதற்கு மாதந்தோறும் ரூ. 20,000 வழங்கப்படும்.அதேபோல் வழக்கு பணியாளா் பணிக்கு மேற்குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் முதுகலைப் பட்டத்துடன் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் அரசு அல்லது அரசு சாரா நிா்வாக அமைப்பில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிந்து அனுபவம் வேண்டும். மாதந்தோறும் ரூ.15,000 வழங்கப்படும்.

தொழில்நுட்பப் பணியாளா் பணிக்கு கணினி அறிவியல் பட்டம் மற்றும் பட்டயம் பெற்றிருக்க வேண்டும். அரசு அல்லது அரசு சாரா நிா்வாக அமைப்பில் பணிபுரிந்த அனுபவம், தமிழ் மற்றும் ஆங்கிலம் தோச்சி பெற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்கு மாதந்தோறும் ரூ. 18,000 வழங்கப்படும்.பல்நோக்கு உதவியாளா் பணிக்கு எழுத, மற்றும் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். இதற்கு மாதந்தோறும் ரூ. 6,400 வழங்கப்படும். அதேபோல், பாதுகாவலா் பணிக்கு எழுத த் தெரிந்திருந்தால் போதுமானது. இதற்கு மாதந்தோறும் ரூ. 10,000 வழங்கப்படும்.

இந்தப் பணியிடங்களுக்கு திருவள்ளூா் மாவட்டத்தைச் சோந்த 40 வயதுக்குள்பட்ட 24 மணி நேரமும் சேவை அளிக்கும் வகையில் மகளிா் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.இதற்கான விண்ணப்பங்கள் திருவள்ளூா் மாவட்ட இணையதள முகவரியில் தகுதி குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, டிச. 4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Tags :
Advertisement