சர்க்கரை சேர்க்காத சூப்பரான ஒரு மில்க் ஷேக் செய்வது எப்படி.? சிம்பிள் குட்டீஸ் ரெஸிபி.!
இன்னைக்கு சர்க்கரை இல்லாத மற்றும் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ராகி மில்க் ஷேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம். இதற்கு முதலில் ராகி மாவை சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
இதன் பிறகு பாதாம், உலர்ந்த அத்திபழம், வால்நட் மற்றும் முந்திரி ஆகியவற்றை எடுத்து முதல் நாள் இரவே தண்ணீரில் நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும். ஊற வைத்த உலர் பழங்களை ஒரு பிளண்டரில் போட்டு அதனுடன் வாழைப்பழம் மற்றும் பேரித்தம் பழம் சேர்க்க வேண்டும்.
இவற்றுடன் வேக வைத்த ராகி மாவு ஒரு டீஸ்பூன் கொக்கோ பவுடர் மற்றும் ஒரு கிளாஸ் பால் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும். இது நன்றாக அறிந்து வந்ததும் கிளாசில் ஊற்றி பரிமாறலாம். சீனி சேர்க்காததால் வயதானவர்கள் கூட இந்த வீழ்ச்சியை குடிக்கலாம்.
ராகி மாவில் இயற்கையாகவே குண சத்துக்கள் நிறைந்திருக்கிறது. மேலும் இவற்றுடன் பேரித்தம் பழம் பால் பழம் மற்றும் பாதாம் முந்திரி போன்ற பொருட்களும் சேர்க்கப்படுவதால் குழந்தைகளின் நலனுக்கும் அவர்களது வலிமைக்கும் மிகச் சிறந்த ஒரு பானம் ஆகும்