For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

காலாண்டு நுகர்வோர் குறைதீர் கூட்டம்...! மக்களே இந்த வாய்ப்பை யாரும் மிஸ் பண்ணிடாதீங்க...!

06:30 AM Dec 26, 2023 IST | 1newsnationuser2
காலாண்டு நுகர்வோர் குறைதீர் கூட்டம்     மக்களே இந்த வாய்ப்பை யாரும் மிஸ் பண்ணிடாதீங்க
Advertisement

நான்காவது 'காலாண்டு நுகர்வோர் குறைதீர் கூட்டம்" நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; நாமக்கல் மாவட்டத்தில் நுகர்வோர்களின் நலன் கருதி அனைத்து துறையின் முதல் நிலை அலுவலர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் ஆகியோர்களுடன் 2023 ஆம் ஆண்டிற்கான நான்காவது 'காலாண்டு நுகர்வோர் குறைதீர் கூட்டம்" நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற உள்ளது.

Advertisement

அதே போல பொதுவிநியோகத் திட்டம் தொடர்பான கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகர்வோர்கள் மேற்படி கூட்டத்தில் கலந்துகொண்டு மனுக்களை அளிக்கலாம். குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் அட்டை கோரும் மனுக்கள் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், கைபேசி எண் பதிவு மற்றும் கைப்பேசி எண் மாற்றம் செய்தலுக்கான மனு பெற்று உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement