For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கிளாம்பாக்கத்தை தொடர்ந்து… பிரம்மாண்டமாக மாறப்போகும் பிராட்வே பேருந்து நிலையம்

05:50 AM May 01, 2024 IST | Baskar
கிளாம்பாக்கத்தை தொடர்ந்து… பிரம்மாண்டமாக மாறப்போகும் பிராட்வே பேருந்து நிலையம்
Advertisement

பிராட்வே பேருந்து நிலையத்தை தற்காலிகமா தீவுத் திடலுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Advertisement

2002ம் ஆண்டுக்கு முன்னர் தமிழ்நாட்டின் அனைத்து இடங்களுக்கும் செல்லும் ஒரு முக்கிய பேருந்து நிலையமாக இருந்தது பிராட்வே என்று அழைக்கப்படும் பாரிமுனை பேருந்து நிலையம்தான். அதன் பின்னர் பிரம்மாண்டமான கோயம்பேடு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு பயணிகள் பயன்பாட்டிற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து பிராட்வே பேருந்து நிலையம் சென்னை மாநகராட்சி பேருந்துகள் இயங்கும் பேருந்து நிலையமாக மாற்றப்பட்டது. அதற்கு பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். கோயம்பேடு பேருந்து நிலையம் நீண்ட தூரம் இருப்பதால் எளிதில் அடையமுடிவதில்லை எனக் கூறி பொதுமக்கள் போராடினர்.

அதன் பின்னர் மக்கள் புழங்கத் தொடங்கியதும் கோயம்பேடு பேருந்து நிலையம் வெளியூர்களுக்கு செல்லும் பேருந்து நிலையமாகவும் , பிராட்வே பேருந்து நிலையம் உள்ளூர் பேருந்து நிலையமாகவும் செயல்பட்டு வருகிறது. தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டு அவை பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இந்த நிலையில் பிராட்வே பேருந்து நிலையத்தை தற்காலிகமாக தீவுத் திடலுக்கு இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ‘மல்டி மாடல் இன்டகிரேஷன்’ என்ற போக்குவரத்து முனையம் அமைக்கும் பணிக்காக இடமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவகல் வெளியாகியுள்ளது. இதற்காக தீவுத்திடலில் சென்னை மாநகராட்சி சார்பில் 5 கோடி ரூபாய் செலவில் அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளது.

இதன்படி அடுத்த ஒரு சில மாதங்களில் பிராட்வே பேருந்து நிலையம் தீவு திடலுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளது இதன்பிறகு பிராட்வே பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு போக்குவரத்து முனையம் அமைக்கும் பணி தொடங்கும். பிராட்வே பேருந்து நிலையம் இருந்த இடத்தில் 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கொண்ட பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது. குறளகம் கட்டிடம் இடிக்கப்பட்டு 10 மாடிகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்படவுள்ளது. இங்கிருந்து மெட்ரோ ரயில் நிலையம், புறநகர் ரயில் நிலையம் என்று அனைத்தையும் இணைக்கும் வகையில் 7 நடை மேம்பாலம் அமைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More: ICC World T20 | உலகக்கோப்பை இந்திய அணியில் தமிழக வீரர்கள் நிராகரிப்பு.!! அதிருப்தியில் கிரிக்கெட் ரசிகர்கள்.!!

Tags :
Advertisement