முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கனமழை எச்சரிக்கை..! 14 கடலோர மாவட்ட மீனவர்கள் 2 நாட்கள் கடலுக்குள் செல்ல தடை...!

06:00 AM Nov 14, 2023 IST | 1newsnationuser2
Advertisement

கனமழை எச்சரிக்கை காரணமாக கடலோர மாவட்ட மீனவர்கள் 2 நாட்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 16-ம் தேதி வாக்கில் நிலவக்கூடும்.

Advertisement

இதன் காரணமாக தமிழ்நாட்டின் கடலோரத்தில் உள்ள 14 மாவட்ட மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதித்து வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இன்றும் நாளையும் தமிழ்நாட்டின் கடலோர மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

கனமழை காலங்களில், பொதுமக்கள் நீர்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும், இடிமின்னலுடன் கனமழை பெய்து வரும்போது திறந்தவெளியில் நிற்பதையும், நீர்நிலைகளில் குளிப்பதையும், மரங்கள் மற்றும் உலோக கட்டமைப்புகளின் கீழ் நிற்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

Tags :
Boatfisher manrain alertsea
Advertisement
Next Article