For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"ஓபிஎஸ் வேறு திசையில் செல்கிறார்" அணியிலிருந்து விலகும் ஜேசிடி பிரபாகர், புகழேந்தி!

K.C said that we will form an AIADMK coordination committee and engage in efforts to unify AIADMK. Palaniswami, Pugahendi, J.D.S. Prabhakar have jointly interviewed.
04:08 PM Jun 08, 2024 IST | Mari Thangam
 ஓபிஎஸ் வேறு திசையில் செல்கிறார்  அணியிலிருந்து விலகும் ஜேசிடி பிரபாகர்  புகழேந்தி
Advertisement

அதிமுக ஒருங்கிணைப்பு குழு ஒன்றை உருவாக்கி, அதிமுகவை ஒருங்கிணைப்பு முயற்சியில் ஈடுபடுவோம் என கே.சி. பழனிசாமி , புகழேந்தி , ஜே.டி.எஸ். பிரபாகர் ஆகியோர் கூட்டாக பேட்டியளித்துள்ளனர். 

Advertisement

இதுவரை ஓபிஎஸ் அணியில் பயணித்து வந்த ஜேசிடி பிரபாகரன், அதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.  இதுகுறித்து கே.சி. பழனிசாமி , புகழேந்தி , ஜே.டி.எஸ். பிரபாகர் ஆகியோர் கூட்டாக பேட்டியளித்துள்ளனர். அப்போது செய்தியாளர்களிடம் புகழேந்தி பேசுகையில் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 7 இடங்களில் டெபாசிட்டை இழந்துள்ளது.

ஓபிஎஸ் வேறு திசையில் பயணிக்கிறார், அதில் எங்களுக்கு உடன்பாடில்லை. இதனால் ஓபிஎஸ்ஸுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. வடக்கில் இருந்து வந்து ஆள்வதற்கு நாங்கள் விட மாட்டோம். 2ஆவது இடத்திற்கு தேசியக் கட்சிகள் வரவிடக் கூடாது. அனைவரும் ஒருங்கிணைந்து பயணிக்க வேண்டும். இதற்காக அதிமுக ஒருங்கிணைப்பு குழு ஒன்றை உருவாக்கி, அதிமுகவை ஒருங்கிணைப்பு முயற்சியில் ஈடுபடுவோம் என புகழேந்தி தெரிவித்துள்ளார்.

Read more ; காதலிக்க மறுத்த பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை லீக் செய்த இளைஞன் கைது!

Tags :
Advertisement