For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஓடிடி-யில் வெளியாகும் ‘சைரன்’! எப்போ ரிலீஸ் தெரியுமா?

03:45 PM Apr 10, 2024 IST | Mari Thangam
ஓடிடி யில் வெளியாகும் ‘சைரன்’  எப்போ ரிலீஸ் தெரியுமா
Advertisement

நடிகர் ஜெயம் ரவி நடித்த சைரன் திரைப்படம் வரும் 19 ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இறைவன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் சைரன் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ்,  அனுபமா பரமேஸ்வரன்,  சமூத்திரகனி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.  இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

காவலில் இருக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் பரோலில் வெளியே வருகிறார். அப்பொழுது எதிர்பாராத விதமாக பல கொலைகள் நடக்கிறது.  இந்நிலையில் காவல்துறையின் சந்தேகம் ஜெயம் ரவியின் மீது திரும்ப,  அடுத்து நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் சைரன் படத்தின் கதை.  இப்படம் வெளியாகி இரண்டு மாதங்கள் ஆன நிலையில் தற்போது ஏப்ரல் 19-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. முன்னதாக ஏப்ரல் 11-ம் தேதி ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என படக்குழு தெரிவித்த நிலையில், தற்போது ஓடிடி தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement