For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஒரு நாள் சுங்கச்சாவடி வசூல் மட்டும் இத்தனை கோடியா? வெளியான அறிக்கை!!

03:38 PM Aug 03, 2024 IST | Mari Thangam
ஒரு நாள் சுங்கச்சாவடி வசூல் மட்டும் இத்தனை கோடியா  வெளியான அறிக்கை
Advertisement

நாட்டில் இயங்கி வரும் சுங்கச்சாவடிகளில், 5ல் மட்டும் நாள் ஒன்றுக்கு தலா ரூ.1 கோடி வசூல் ஆகியுள்ளது என மத்திய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் இயங்கி வரும் 5 சுங்கச்சாவடிகளில் நாள் ஒன்றுக்கு தலா ரூ.1 கோடி வசூல் ஆகிறது.

  • குஜராத் மாநிலம், பரதனா சுங்கச்சாவடியில், 2023-24ம் நிதியாண்டில், ரூ.475.65 கோடி வசூல் ஆகி உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.2,043 கோடி வசூல் ஆகியுள்ளது. இது தான் நாட்டிலேயே அதிக கட்டணம் வசூல் ஆகும் சுங்கச்சாவடி.
  • 2ம் இடத்தில் உள்ள ராஜஸ்தான் மாநிலம், ஷாஜஹான்பூர் சுங்கச்சாவடியில், கடந்த நிதியாண்டில் ரூ.429.65 கோடி வசூல் ஆகியுள்ளது.
  • 3ம் இடத்தில் உள்ள ஹரியானா மாநிலம், கரோண்டா சுங்கச்சாவடியில், கடந்த நிதியாண்டில் ரூ.4,026 கோடி வசூல் ஆகியுள்ளது.
  • 4ம் இடத்தில் உள்ள மேற்குவங்க மாநிலம், ஜல்துலகோரி சுங்கச்சாவடியில், கடந்த நிதியாண்டில் ரூ.364.23 கோடி வசூல் ஆகியுள்ளது.
  • 5ம் இடத்தில் உள்ள உத்தரபிரதேச மாநிலம், பரஜோர் சுங்கச்சாவடியில், கடந்த நிதியாண்டில் ரூ.364 கோடி வசூல் ஆகியுள்ளது.

கடந்த 2019-20 மற்றும் 2023-24ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நாடு முழுவதும், சுங்கச்சாவடிகளில் ரூ.1.94 லட்சம் கோடி வசூல் ஆகியுள்ளது. அதிக சுங்கச்சாவடிகள் இருக்கும் மாநிலப்பட்டியலில் ராஜஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. இங்கு மட்டும் 142 சுங்கச்சாவடிகள் உள்ளன. இரண்டாம் இடத்தில் உள்ள உத்தரபிரதேசத்தில் 102 சாவடிகள் உள்ளன. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில், கடந்த 5 ஆண்டுகளில் 457 சுங்கச்சாவடிகள் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read more ; Paris Olympics 2024 | இந்திய ஹாக்கி அணி தங்கம் வெல்வது உறுதி..!! – கேப்டன் ஹர்மன்பிரீத்

Tags :
Advertisement