’எல்லாம் தெரிந்தே நெப்போலியன் இப்படி செய்யலாமா’..? ’பெண்ணின் வாழ்க்கையே போச்சு’..!! அதிர்ச்சி தரும் மருத்துவர்..!!
நெப்போலியன் மகனின் திருமணம் குறித்து பிரபல யூடியூப் சேனலுக்கு டாக்டர் காந்தராஜ் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.
90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன். பாரதிராஜாவின் புதுநெல்லு படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமான அவர், முதல் படத்திலேயே மிரட்டலான நடிப்பால் கவனம் பெற்றார். இதைத்தொடர்ந்து, ரஜினியின் எஜமான் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்த அவர், பின்னர் ஹீரோவாகவும் கலக்கினார்.
நெப்போலியன் ஜெயசுதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தனுஷ், குணால் என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில், 4 வயது இருக்கும் போதே தனுஷிற்கு அரிய வகை தசை சிதைவு நோய் ஏற்படவே, அவருக்கு சிகிச்சை அளிக்க அமெரிக்கா சென்ற அவர் ஒருக்கட்டத்தில் மகனின் உடல்நலனை கருத்தில் கொண்டு அமெரிக்காவிலே செட்டிலாகிவிட்டார். அங்கு சொந்தமாக பிசினஸ் செய்து வரும் அவர் இயற்கை விவசாயத்தையும் கவனித்து வருகிறார்.
25 வயதாகும் தனது மகன் தனுஷிற்கு திருமணம் செய்ய நெப்போலியன் ஏற்பாடு செய்து வந்த நிலையில், சமீபத்தில் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. தனுஷை திருமணம் செய்து கொள்ள உள்ள பெண் திருநெல்வேலி மாவட்டம் தான். மூலக்கரைப்பட்டியை சேர்ந்த விவேகானந்தர் என்பவரின் மகள் அக்ஷயாவை தான் நெப்போலியன் தனது மகனுக்கு நிச்சயம் செய்துள்ளார்.
இந்த நிலையில் டாக்டர் காந்தராஜ் நெப்போலியன் மகனின் திருமணம் குறித்து பேசி உள்ளார். பிரபல யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "திமுகவின் கே.என்.நேரு மூலமாக தான் நெப்போலியன் சினிமாவில் அறிமுகமானார். பல படங்களில் நடித்து நல்ல நடிகர் என்ற பெயரையும் அவர் எடுத்தார். பின்னர், திமுகவில் இணைந்த அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ ஆனார். பின்னர் பாஜகவில் இணைந்தார்.
இதற்கிடையே, ஐடி தொழிலில் கவனம் செலுத்தத் தொடங்கிய அவர் டிஎல்பிஎல் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனம் நல்ல வளர்ச்சி அடைந்த நிலையில், அவர் கோடிக்கணக்கில் சம்பாதித்தார். பின்னர், அமெரிக்காவிலேயே செட்டிலாகிவிட்டார். நெப்போலியன் மகனுக்கு இருப்பது அரிய வகை நோய் மட்டுமல்ல. அது ஒரு ஆபத்தான நோய். இது பரம்பரையாக வரக்கூடியது. இதற்கு ஆங்கில மருத்துவத்தில் எந்த சிகிச்சையும் இல்லை. பொதுவாக இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 12 அல்லது 13 வயதிலேயே இறந்துவிடுவார். இவர் 25 வயது இருப்பதே பெரிய சாதனை. அவருக்கு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
அவரால் தாம்பத்ய வாழ்க்கையிலும் ஈடுபட முடியாது. இதை எல்லாம் தெரிந்து தான் அந்த பெண்ணும் அவரின் பெற்றோரும் ஒப்புக்கொண்டுள்ளனர். சில பெண்கள் புரட்சியை ஏற்படுத்துகிறேன் என்று இதுபோன்ற மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். சிலர் விளம்பரத்திற்காக கூட இதை செய்யலாம். அது பற்றி நாம் பேச முடியாது" என்று தெரிவித்தார்.