என்ன சொல்றீங்க.? 2050-க்குள் இந்த மாவட்டங்கள் கடலுக்குள்ள மூழ்கிடுமா.? இது தான் காரணமா.?
இன்று எங்கு பார்த்தாலும் குளோபல் வார்மிங் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகில் ஏற்படும் பல்வேறு இயற்கை சீற்றங்களுக்கும் மூல காரணமாக குளோபல் வார்மிங் என்ற புவி வெப்பமயமாதலே காரணமாக சொல்லப்படுகிறது. புவி வெப்பமயமாதல் என்பது நம் வளிமண்டலத்தில் ஆக்சிஜன் அளவைவிட கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்களின் அளவு அதிகரிக்கும் போது பூமி வெப்பமடைகிறது. இதுவே புவி வெப்பமயமாதல் என அழைக்கப்படுகிறது.
இதன் காரணமாகவே பல இயற்கை சீற்றங்கள் நிகழ்வதாக வானிலை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பூமி வெப்பமடைவதால் பனி மலைகள் உருக தொடங்குகிறது. இதன் காரணமாக அவற்றில் படிந்திருக்கும் பணி உருகி கடலில் கலந்து வருவதால் கடல் மட்டம் ஒவ்வொரு வருடத்திற்கும் உயர்ந்து கொண்டே வருகிறது.
மேலும் பெரும் புயல் மற்றும் கனமழைக்கு காரணம் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த குளோபல் வார்மிங் காரணமாக சென்னை மற்றும் நாகப்பட்டினம் கடலில் முழுவதுமாக மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக பேசியிருக்கும் நீர் ஆராய்ச்சி நிறுவன தலைவர் ஜனகராஜன் புவி வெப்பமயமாதல் மிகப்பெரிய இயற்கை அழிவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் கர்நாடகா கேரளா போன்ற மாநிலங்களில் ஏற்பட்ட பெரும் புயல் மற்றும் வெள்ளம் போன்றவற்றிற்கு இயற்கை சீற்றங்கள் மட்டுமே காரணம் அல்ல எனவும் தெரிவித்திருக்கிறார். ஆறு தென் மாநிலங்களுக்கு அரணாக விளங்கும் மேற்கு தொடர்ச்சி மலையில் குவாரிகள் அமைக்க அனுமதி கொடுத்ததன் விளைவு தான் இந்த இயற்கை சீற்றங்கள் எனவும் தெரிவித்துள்ளார். குளோபல் வார்மிங் காரணமாக கடல் மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது. இவற்றால் சென்னை மற்றும் நாகப்பட்டினம் நகரங்கள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்து இருக்கிறார். 2050 ஆம் வருடத்திற்குள் சென்னை மற்றும் நாகப்பட்டினம் போன்ற நகரங்கள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாக ஆர்எம்எஸ்ஐ நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மேலும் கொச்சி, திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், மும்பை மற்றும் மங்களூர் நகரங்களுக்கும் இந்த அபாயம் இருப்பதாக அறிவித்துள்ளது.