For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

எனக்கு போட்டி விஜய் என நினைத்தால் அது எனக்கு மரியாதை இல்லை...! ரஜினிகாந்த் கருத்து...!

06:11 AM Jan 27, 2024 IST | 1newsnationuser2
எனக்கு போட்டி விஜய் என நினைத்தால் அது எனக்கு மரியாதை இல்லை     ரஜினிகாந்த் கருத்து
Advertisement

ரஜினிக்கு விஜய் போட்டி என நினைத்தால் அது எனக்கு மரியாதை இல்லை; விஜய்க்கு ரஜினி போட்டி என அவர் நினைத்தால் அது அவருக்கு மரியாதை இல்லை.

Advertisement

லால் சலாம் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த்; விஜய் என் கண்ணுக்கு முன்னால வளர்ந்த பையன். தர்மத்தின் தலைவன் அவர். ஷூட்டிங் அப்போ விஜய்க்கு 13, 14 வயசிருக்கும், ஷுட் முடிஞ்சதும் சந்திரசேகர் என்னுடைய மகன் என்று அறிமுகம் செய்தார். நடிப்பில் ரொம்ப ஆர்வம் இருக்கான். நீங்க சொல்லுங்க. படிச்சுட்டு வந்து ஆக்ட் பண்லாம்ன்னு நீங்க சொல்லுங்க என்றார். அப்ப விஜய்ட்ட "நல்லா படிப்பா. அதுக்கப்புறம் ஆக்டர் ஆகலாம்ன்னு சொன்னேன்.

அதன் பின்னர் விஜய் ஆக்டர் ஆகி, படிப்படியா அவருடைய டிசிப்ளின், திறமை, உழைப்பால இப்ப உயர்வான இடத்துல இருக்கார். நெக்ஸ்ட் அரசியல்... சமூகசேவைனு போக இருக்கார். இதுல வந்துட்டு... எனக்கும் விஜய்க்கும் போட்டினு சொல்றது நெஜம்மா... ரொம்ப கஷ்டமா இருக்கு மனசு. தயவு செஞ்சு ரெண்டு பேருடைய ரசிகர்களும் ஒப்பிடவேண்டாம். இது என்னுடைய அன்பான வேண்டுகோள் என கூறினார்.

Tags :
Advertisement