உணவு, உடலுறவு இந்த இரண்டில் எதை தேர்ந்தெடுப்பீர்கள்? சமந்தா சொன்ன பதில்!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..
உணவு, உடலுறவு இந்த இரண்டில் எதை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்? என நேர்காணலில் சமந்தாவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. கடந்த 2010-ம் ஆண்டு விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமான அவர் தொடர்ந்து பாணா காத்தாடி, நான் ஈ, அஞ்சான், கத்தி, தங்க மகன், 24, தெறி, இரும்புத்திரை என பல ஹிட் படங்களில் நடித்தார். திரை வாழ்க்கையில் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கினார் சமந்தா. முதலில் நடிகர் சித்தார்த்தும், சமந்தாவும் காதலித்து வந்த நிலையில் பின்னர் இந்த ஜோடி பிரேக் அப் செய்து கொண்டனர்.
நாக சைதன்யாவை காதலித்து வந்த சமந்தா அவரை கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணமும் 4 ஆண்டுகளில் தோல்வியில் முடிந்தது. 2021-ம் ஆண்டு சமந்தா – நாக சைதன்யா இருவரும் தங்கள் பிரிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதனால் பல விமர்சனங்களை எதிர்கொண்டார் சமந்தா. இவரின் விவாகரத்து சமூகவலைத்தளங்களிலும் அதிகம் விவாதிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, ஒரு நேர்காணலில், உணவு, உடலுறவு இந்த இரண்டில் எதை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்? என்கிற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன சமந்தா 'உணவு தேவைக்கு மட்டுமே. ஆனால், உடலுறவு மகிழ்ச்சி சம்பந்தப்பட்டது. எனவே, நான் உடலுறவுக்காக பட்டினி கிடப்பேன்' என் ஓப்பனாக சொல்லி இருந்தார். இது சொல்லி பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், இப்போது இந்த வீடியோ வைரலானது.