For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இஸ்ரேல் -ஈரான் மோதல் ;உதவி எண்ணை அறிவித்த இந்திய தூதரகம்!

03:42 PM Apr 14, 2024 IST | Mari Thangam
இஸ்ரேல்  ஈரான் மோதல்  உதவி எண்ணை அறிவித்த இந்திய தூதரகம்
Advertisement

ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் அவசர உதவி எண்ணை வெளியிட்டுள்ளது.

Advertisement

சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனால் இஸ்ரேல் மீது ஈரான் கடும் கோபத்தில் உள்ளது.

இந்த தாக்குதலையடுத்து எந்நேரமும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்று பதற்றம் நிலவி வந்தது. இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என அச்சம் ஏற்பட்டதால் மறு உத்தரவு வரும்வரை இந்தியர்கள் இஸ்ரேல், ஈரான் சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், இந்தியர்கள் உடனடியாக இந்திய தூதரகங்களை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளும் பயண எச்சரிக்கையை நாட்டு மக்களுக்கு விடுத்தன.

இந்நிலையில் இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் அமைதியாக இருக்கவும், உள்ளூர் அதிகாரிகளால் வழங்கப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்கவும் இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது. நிலைமையை உண்ணிப்பாக கண்காணித்து வருவதாக குறிப்பிட்ட இந்திய தூதரகம் அவசர உதவி எண்ணை வெளியிட்டது. அதன்படி, +972-547520711, +972-543278392 என இரு அவசர உதவி எண்ணை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.

Tags :
Advertisement