இன்றுமாலை வரை எச்சரிக்கை நீட்டிப்பு!... ராட்சத அலைகள் எழும்!... கடலோர மாவட்ட மக்களுக்கு அறிவுறுத்தல்!
Giant wave: தமிழ்நாட்டில் கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என்பதால் இன்று மாலை வரை கடலில் இறங்கவேண்டாம் என்று இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எவ்விதமான அறிகுறிகளும் இன்றி திடீரென கடல் சீற்றம் அடைவது, 'கள்ளக்கடல்' நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது. இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் சில நேரங்களில் திடீரென எந்தக் குறிப்பும் அல்லது எச்சரிக்கையும் இன்றி ஏற்படும் பலத்த காற்றின் விளைவே இப்படி ‘கள்ளக்கடல்’ என அழைக்கப்படுகிறது.
இந்நிகழ்வுக்கான 2 நாட்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதாவது, மே 4 மற்றும் 5ம் தேதிகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்திருந்து. ’இதன் காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும்’ எனச் சொல்லி இருக்கும் அந்த மையம், இதன் காரணமாக சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்திருந்தது.
அந்தவகையில் இன்றுமாலை வரை (மே 6 )தமிழ்நாட்டில் கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என்பதால் மக்கள் யாரும் கடலில் இறங்கவேண்டாம் என்று இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கையை நீட்டித்துள்ளது.