இந்த MDH மசாலாவை சாப்பிட்டால் புற்றுநோய்...! யாரும் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை...!
MDH மற்றும் எவரெஸ்ட் நிறுவனத்தின் நான்கு மசாலாக்களில் புற்றுநோயை உண்டாக்கும் பூச்சிக்கொல்லிப் பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் மசாலாக்களை ஆய்வு செய்த ஹாங்காங்கின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. MDH-ன் மெட்ராஸ் கறி மசாலா, சாம்பார் மசாலா, கறி மசாலா, எவரெஸ்ட்டின் மீன் கறி மசாலாக்களில் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்ஸைடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மசாலா பொருள்களை மக்கள் பயன்படுத்த வேண்டாம் என்றும், கடைகளில் உள்ள மசாலா பொருள்களை விற்பனை செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரத் துறையின் உணவுப் பாதுகாப்பு மையம் கூறியதாவது; பல வகையான ரெடிமேட் செய்யப்பட்ட மசாலா கலவை தயாரிப்புகளின் மாதிரிகளில் பூச்சிக்கொல்லி, எத்திலீன் ஆக்சைடு இருப்பது கண்டறியப்பட்டது, ”என்று CFS ஏப்ரல் 5 அன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அத்தகைய பொருட்களை பொதுமக்கள் சாப்பிடக்கூடாது. வர்த்தகம் பாதிக்கப்பட்ட தயாரிப்புகளில் ஏதேனும் இருந்தால் அவற்றைப் பயன்படுத்துவதை அல்லது விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.