இத்துனூன்டு சுண்டைக்காயில் இவ்வளவு நன்மைகளா.? வாரம் ஒரு முறை கண்டிப்பாக சாப்பிடுங்க.!
தமிழர்களின் சமையலில் சுண்டைக்காய் என்று சிறப்பான ஒரு இடம் உண்டு. கசப்பு சுவை கொண்ட இந்த சிறிய காய் ஏராளமான மருத்துவ நன்மைகளைக் கொண்டு இருக்கிறது. இவற்றில் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்து இருக்கின்றன. சுண்டைக்காய் இடம் உடலின் பல்வேறு நோய்களுக்கும் தீர்வாக விளங்குவதோடு உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது .
சுண்டைக்காயில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே சத்துக்கள் நிறைந்திருக்கிறது. இவற்றில் இருக்கக்கூடிய வைட்டமின் சி சத்தின் காரணமாக உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. மேலும் இரும்பு சத்துக்களை அதிகம் கொண்டிருக்கும் சுண்டக்காயை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் ரத்த சோகை மற்றும் ஹீமோகுளோபின் குறைபாடு போன்ற பிரச்சனைகள் சரி செய்யப்படுகின்றன. இவற்றில் இருக்கக்கூடிய ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உடலில் இருக்கும் நொதிகளை சமநிலைப்படுத்துகிறது இதனால் கணையம் மற்றும் இரைப்பை போன்ற உறுப்புகள் அழற்சி ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.
சுண்டைக்காயை பெண்கள் பயன்படுத்துவதன் மூலம் அவர்களது மாதவிடாய் சுழற்சி ஒழுங்குபடுத்தப்படுகிறது. இவற்றில் சபோஜனின் இன்ட்ரெஸ்ட்டராய்டு மூலக்கூறு இருக்கிறது. இது நம் உடலின் கார்மோன்களை கட்டுப்படுத்துகிறது. இதன் காரணமாக பெண்களுக்கு இருக்கும் ஒழுங்கற்ற மாதவிடாய் சரி செய்யப்பட்டு சீரான மாதவிடாய் சுழற்சிக்கு வழிவகுக்கிறது. சுண்டைக்காயில் இருக்கும் க்ளைகோசைட் என்ற என்சைம் உடலின் இன்சுலின் சுரப்பை கட்டுப்படுத்துகிறது. இதன் காரணமாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது.
இந்த சிறிய காயில் இருக்கக்கூடிய நார்ச்சத்து உடல் எடையை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வைக்கிறது. மேலும் செரிமான மண்டலம் சிறப்பாக செயல்படுவதற்கும் அஜீரணக் கோளாறுகளை போக்குவதற்கும் பயன்படுகிறது. சுண்டைக்காயில் இருக்கக்கூடிய ஆன்டிஆக்சிடென்ட்கள் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தம் உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் சீரான அளவில் கிடைப்பதற்கு வழி செய்கிறது.