For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இட்லி, தோசை, சப்பாத்திக்கு சுவையான தக்காளி குருமா..! ட்ரை பண்ணி பாருங்க.!?

07:00 AM Dec 06, 2024 IST | Mari Thangam
இட்லி  தோசை  சப்பாத்திக்கு சுவையான தக்காளி குருமா    ட்ரை பண்ணி பாருங்க
Advertisement

நாம், வழக்கமாக தக்காளி சாதம், தக்காளி குழம்பு, தக்காளி ரசம், தக்காளி சட்னி, தக்காளி ஊறுகாய் செய்திருப்போம். எப்போதாவது, தக்காளியை வைத்து குருமா செய்ய முயற்சித்ததுண்டா..? இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பிரியாணி, வெள்ளை சாதம் என அனைத்திற்கும் ஏற்ற தக்காளி குருமா செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Advertisement

தக்காளி குருமா செய்ய தேவையான பொருட்கள் :

தக்காளி -6, வெங்காயம் 2, சோம்புத்தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, தேங்காய் பால் - 1 கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, கடுகு, உளுத்தம் பருப்பு - கால் டீஸ்பூன், கருவேப்பிலை தேவையான அளவு

செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தக்காளியை போட்டு வேகவிடவும். 5 நிமிடங்கள் வரை வெந்ததும் தக்காளி எடுத்து தோல் நீக்கி மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை போட்டு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்க வேண்டும். பிறகு அதில் பச்சை மிளகாய் மற்றும் தக்காளி போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி விடவும்.

பின்பு கடாயில் மஞ்சள் தூள், மிளகாய்  தூள், சோம்புத்தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் நிலையில் தேங்காய் பால் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விடவும். பின்பு தேங்காய் பாலின் பச்சை வாசனை நீங்கி எண்ணெய் பிரிந்து வரும். இந்த நிலையில் அடுப்பை அணைத்து கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கினால் சுவையான ஹோட்டல் ஸ்டைல் தக்காளி குருமா தயார்.

Read more ; 65 வயதில், உடலுறவுக்கு ஆசைப்பட்டு முதியவர் செய்த காரியம்..

Tags :
Advertisement