For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”ஆட்சி அதிகாரத்தில் பங்கு”..!! தவெக தலைவர் விஜய்யின் கருத்துக்கு கேப்டன் மகன் விஜயபிரபாகரன் ஆதரவு..!!

Vijaya Prabhakaran of DMDK in the AIADMK alliance has welcomed Tamil Nadu Victory Kazhagam president Vijay's speech in the conference saying that it is a share in the power of government.
11:55 AM Oct 30, 2024 IST | Chella
”ஆட்சி அதிகாரத்தில் பங்கு”     தவெக தலைவர் விஜய்யின் கருத்துக்கு கேப்டன் மகன் விஜயபிரபாகரன் ஆதரவு
Advertisement

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மாநாட்டில் பேசியதற்கு அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவின் விஜயபிரபாகரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Advertisement

பசும்பொன் சென்றுள்ள அவர், முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து செய்தியளர்களிடம் பேசிய அவர், ”பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் நான் முதல் முறையாக கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் விஜயகாந்துடன் வந்துள்ளேன். தற்போது பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆணைக்கு இணங்க நான் வந்துள்ளேன்.

நீண்டநாள் போராட்டத்துக்கு பின் நடிகர் விஜய் மாநாடு நடத்தி உள்ளார். அதற்கு என் வாழ்த்துகள். தமிழ்நாட்டில் ஒரு மாநாடு நடைபெறும் போது எங்களுடைய நினைவுகளை சுட்டிக்காட்டுவது வழக்கம். அதுபோலதான் விஜய் மாநாட்டின் போது தேமுதிகவின் முதல் மாநாடு தொடர்பான வீடியோ பகிரப்பட்டது. நான் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைச் சேர்ந்தவன்.

அண்ணன் விஜய் ஒரு கட்சியை ஆரம்பித்து ஒரு கருத்தைச் சொல்கிறார். அவர் ஒரு மாநாட்டைத்தான் நடத்தி முடித்துள்ளார். அதிகாரத்தில் பெரிய கட்சி இருக்கும்போது, அதை சரிசமமாக அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என பல கட்சிகள் பேசுவதை தேமுதிகவும் முன்வைக்கிறது. தவெக மாநாட்டில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று விஜய் பேசியது வரவேற்கத்தக்கது” என்று விஜயபிரபாகரன் கூறியிருக்கிறார்.

Read More : இன்ஸ்டாவில் இளம்பெண்ணுக்கு விரித்த வலை..!! ரூம் போட்டு நண்பர்களுக்கு விருந்தாக்கிய 2கே கிட்..!! பல்லாவரத்தில் பயங்கரம்..!!

Tags :
Advertisement