முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் செய்து கொண்ட சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் இலவசமா..? மருத்துவர் சொன்ன பரபரப்பு தகவல்..!!

Actor Rajinikanth's Aortic Aneurysym treatment at Apollo Hospital, Creams Road, Chennai has been done free of cost in Tamil Nadu Government Hospitals.
04:37 PM Oct 06, 2024 IST | Chella
Advertisement

நடிகர் ரஜினிகாந்த் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் செய்து கொண்ட Aortic aneursym சிகிச்சை தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இதுபற்றி மன்னார்குடியைச் சேர்ந்த மருத்துவர் பிரகாஷ் மூர்த்தி சமுக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சையையும், மருந்தையும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். பொதுவாக தனியார் மருத்துவமனைகளில் தான் தரமான சிகிச்சையும் மருந்தும் கிடைப்பதாகவும், ஏழைகள் அதிகம் செல்லும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையும் மருந்தும், அந்த அளவிற்கு தரமாக இருக்காது என்றும் சிலருக்கு பொதுப்புத்தி உள்ளது.

அதாவது, முன்னே பின்னே பார்க்காத ஒருவரை, பார்த்த உடனே ஒருவரை தவறாக எடை போடுவார்களே, அதுபோல் அரசு மருத்துவமனைகள் குறித்து தவறான புரிதல் இருக்கிறது. அந்த புரிதல் தவறு என்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த மருத்துவர் பிரகாஷ் மூர்த்தி தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவை, "நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு, Aortic aneursym ஏற்பட்டது.

அதற்கான சிகிச்சை முடிந்து கடந்த 4ஆம் தேதி நலமுடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் . இந்த நோயைப்பற்றி சில தினங்களுக்கு முன்பு காணொளி வெளியிட்டிருந்தேன். அதைப்பார்த்த பலரும் "காசு இருப்பவர்கள் அப்போலோ மருத்துவமனைக்கு போகலாம். காசு இல்லாத ஏழைகள் அரசு மருத்துவமனைக்குத் தான் போகனும். அங்கே இந்த நோயை கண்டுபிடிப்பார்களா ? சரியான சிகிச்சை கிடைக்குமா ? " என்று கமெண்ட் செய்தனர். நேற்று மதியம் ஒரு முதியவர், காய்ச்சல் சளி இருமலுக்கு சிகிச்சை பெற என் கிளினிக் வந்தார்.

கையில் அரசு மருத்துவமனையில் ஏற்கனவே சிகிச்சைப்பெற்ற நோட்டை வைத்திருந்தார். அதை வாங்கி பார்த்தேன். எனக்கு பயங்கர ஆச்சர்யம். அதில் Diagnosis : Aortic aneursym with hematoma என்று எழுதியிருந்தது. ரஜினிகாந்த் அவர்களுக்கு ஏற்பட்ட அதே aortic aneurysm என்ற நோயை, இந்த முதியவருக்கு திருவாரூர் அரசு மருத்துவமனையில் diagnosis செய்து, சிகிச்சையளித்து டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் அனைத்து வகையான நோய்களும் diagnose செய்யப்படும்.

2014ஆம் ஆண்டு நான் கிளினிக் தொடங்கிய சமயத்தில் Vildagliptin 50mg என்ற சுகர் மாத்திரையின் விலை ₹25. தற்போது அதே மாத்திரை, வடுவூர் PHC ( அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்) வாங்கி சாப்பிடுவதாக ஒரு பாட்டி தனது நோட்டைக் காட்டினார். அதில் VILDAGLIPTIN 50MG என்று எழுதியிருந்தது. கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக வழங்கப்படும் PRO PL என்ற பவுடரின் விலை ₹695. B PROTIN, D PROTIN போன்ற உலக பிரசித்தி பெற்ற பவுடர்களை தயார் செய்யும் BRITISH BIOLOGICALS நிறுவனத்தின் தயாரிப்பு தான் இந்த PRO PL பவுடர். இதைத்தான் தமிழ்நாடு அரசு இலவசாமாக, பாட்டில் பாட்டிலா தராங்க. அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சையையும், மருந்தையும் குறைத்து மதிப்பிட வேண்டாம் நண்பர்களே" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Read More : கல்யாணமாகி 15 வருஷம் ஆச்சு..!! தங்கச்சி உதவியுடன் மச்சானை போட்டுத் தள்ளிய பயங்கரம்..!!

Tags :
தமிழ்நாடு அரசுநடிகர் ரஜினிரஜினிகாந்த்
Advertisement
Next Article